|
ஆராய்ச்சிக் கட்டுரை: ஒன்றைக் குறித்து ஆராய்ந்து எழுதுவது
ஆராய்ச்சிக் கட்டுரை. இது பெரும்பாலும் இலக்கிய ஆராய்ச்சியைப்
பற்றியதாகும்.
பத்திரிகைக் கட்டுரை: இது தனிவகையான கட்டுரை வார மாத
வெளியீடுகளிலும் ஞாயிறு மலர்களிலும் பொங்கல் மலர்களிலும்
வெளியிடப் படுவதையே பத்திரிகைக் கட்டுரை என்கிறோம். இஃது
ஒரு தனியினம். நாட்டில் மக்கள் கவனத்தைக் கவரக்கூடிய
பொருளைப் பற்றியதாக இருப்பதுதான் இக்கட்டுரை. இவற்றின்
தலைப்புகள் கவர்ச்சியுள்ளனவாக இருக்க வேண்டும். இவை குறைந்த
கல்வியுள்ளவர்களும் படித்தறிந்து கொள்ளத்தக்க நடையில் விளக்கமாக,
கூடுமானால், நகைச்சுவை பொருந்த அமையவேண்டும். புள்ளி விவரங்கள்
தக்க சான்றுகளுடன் கொடுக்கப்படவேண்டும். இக்கட்டுரைகளுக்கு நீண்ட
முன்னுரை இல்லாதவாறு பொருளைத் தொடங்கி நன்முறையில் முடிப்பது
இன்றியமையாததாகும். நீண்ட முன்னுரையைப் படிக்க நேரம் கிடையாது;
படிக்கப் பொறுமையும் இல்லை. இக்கட்டுரைகள் நீண்டிருத்தலும் கூடாது.
இன்று நேரம் வேகமாய் ஓடுகிறது. வாழ்க்கையும் வேகமாகப் போகிறது.
காலம் காசு. எனவே பத்திரிகைக் கட்டுரைகள் நீண்டிராமல்
சுவையுடையனவாக இருக்க வேண்டும்.
கட்டுரைக்குப் பொருள் தேடுவது பற்றித் தெரிந்து கொள்ளவும்
வேண்டும். கருத்துகள் எளிதாக வருவதில்லை; நினைக்கும்போது
தோன்றுவதில்லை. திடீரென்று தோன்றி மறைந்துவிடும்.
குளிக்கும்போதோ, உலவும் போதோ, பயணம் செய்யும் போதோ,
முகச் சவரம் செய்யும் போதோ திடீரென்று கருத்துக்கள் தோன்றும்.
அவற்றை மறந்து போவதற்கு முன் எழுதிவைத்துக் கொள்ள
வேண்டும். எப்போதும் ஒரு குறிப்பேடு வைத்துக் கொள்வது நல்லது.
கருத்துத் தோன்றாவிடின் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும்.
அப்போது உள் மனம் வேலை
|