பக்கம் எண் :

382நல்ல தமிழ் எழுத வேண்டுமா?


செய்து கருத்துகளை முன் கொணர்ந்து நிறுத்தும். பலர் மிகுதியாகப்
படிப்பதில்லை; எழுத்தாளரானதும் மேலும் மேலும் நூல்களைப்
படிப்பது கிடையாது. பேரறிஞர்கள், என்றும் படித்துக்
கொண்டேயிருப்பார்கள். ஆங்கிலப் பேரறிஞரான ஜான்சன்,
‘‘ஒரு நாளைக்கு ஐந்து மணி நேரம் படி; அறிவு பெறுவாய்”
என்றார். நாளிதழ்களையும் தவறாது படிக்க வேண்டும். மஞ்சள்
இதழ்களைப் படிக்காமல் நல்ல நாளிதழ்களைப் படிக்க வேண்டும்.
அப்பொழுது தான் நல்லறிவும் பொது அறிவும் பெருகும்.
அவற்றைப் படிக்கும்போது கிடைக்கும் அரிய கருத்துகளையும்
புள்ளி விவரங்களையும் ஒரு குறிப்பேட்டில் எழுதி வைத்துக்
கொள்ளவும் வேண்டும். அக்குறிப்புகள் வேண்டும் பொழுது பயன்படும்.

எந்தக் கட்டுரையிலும் பத்தியமைப்பு, நிறுத்தக்குறிகள் இவற்றில்
கவனம் செலுத்த வேண்டும். சொற்பொழிவு செய்யாமல் சிறு
வாக்கியங்களும் பெருவாக்கியங்களும் கலந்து இலக்கியச் சுவையுடன்
எழுதினால் கட்டுரைகள் படிப்பதற்குச் சுவையுடையனவாக இருக்கும்
என்பதில் ஐயமில்லை.