பக்கம் எண் :

384நல்ல தமிழ் எழுத வேண்டுமா?


விரும்பும் எளிய தெளிவு நடையே அன்றிப் பிறர் சொல்லும் கொச்சைப்
பேச்சு நடை அன்று என்று அறிதல் வேண்டும்.

வி.கோ. சூரிய நாராயண சாஸ்திரியார் (பரிதிமாற் கலைஞர்),
“பண்டிதரானோர் திரிசொற்கள் பல வழங்கியும், அருகிய
சொல்லுருவங்களை உபயோகித்தும், செய்யுட்களில் அருகி
வரும் அளபெடைகளைத் தொடுத்தும், விரிக்க வேண்டிய
வேற்றுமை உருபுகளைத் தொகுத்தும், சாமானிய மக்கள் மருண்டு
ஒதுங்கிச் செல்லத் தக்கவாறு எழுதும் வழக்கத்தை நிறுத்திவிடல்
வேண்டும், கடின நடை கூடாது. ‘அன்னோன் ஈண்டை இருந்திருக்குபு
பிற்றை ஞான்று ஏகினன்’ என்பது போன்று எழுதலாகாது. ‘அவன்
இங்கே தங்கியிருந்து மறுநாள் போனான்’ என்று எழுதுக” என எளிய
நடையைக் கைக்கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார்.

கருத்தை ஒட்டியே மொழிநடை அமைகிறது. அவரவர்
மனப்பண்புக்கும் தன்மைக்கும் கல்விப்பயிற்சிக்கும் முயற்சிக்கும்
ஏற்றவாறு மொழிநடை இருக்கும். இலக்கணம், இலக்கியம் மிக நன்கு
கற்று விடுவதாலே மட்டும் நல்ல மொழி நடை அமைந்து விடுவதில்லை.
அது கருவிலே அமைந்த திருவாக இருக்கிறதெனில் தவறாகாது. பலரும்
கறி சமைப்பர்; அவருள் ஒரு சிலரே சுவையாகச் சமைப்பர். ‘ஐந்தும்
இருந்தால் அறியாத பெண்ணும் நன்கு கறி சமைப்பாள்’ என்பது
முற்றும் உண்மையன்று. ஐந்தும் இருந்தும் பலர் சமைக்கும் திரு
அமையாமையால், சமைக்குங் கறி சுவையற்றிருக்கக் காண்கிறோம்.
ரசம் வைப்பதும் சிலருக்கே அமைந்த திருவாக இருப்பது கண்கூடு.
அது போலவே நல்ல மொழி நடை அமைவது ஒரு சிலருக்கே கைவந்த
திறனாக உளது. இதனால், முயற்சி வேண்டுவதில்லை என்று கூறவில்லை.
ஒருவருக்கு முயற்சியும் பயிற்சியும் இருந்தால், அவர் சிறந்த மொழி நடை
எழுதும் திறம் பெறலாம். முயற்சியுடையார் இகழ்ச்சியடைவரோ?
அடையார். ஆங்கிலப் பெரும் புலவர் ஸ்டீவன்சன் என்பார், ‘‘நான்
அறிஞர் பலருடைய கட்டுரைகளைப்