தொடுத்து எழுதுவது இலக்கிய நடை. விஞ்ஞானக் கட்டுரைகளை
இந்நடையில் எழுதுதல் கூடாது.
கலப்பு மொழி நடை என்பது வடசொற்களையும் பிற மொழிச்
சொற்களையும் கலந்துவரக் கவலைப்படாது எழுதுவது.
தூய தமிழ்ச் சொற்களால் எழுதுவது தனித்தமிழ் நடை. இது
பயிற்சிக் குறைவால் கற்பார்க்குச் சிறிது கடினமாகத் தோன்றும்.
அடுக்குமொழி நடை என்பது சொற்களை அடுக்கி
ஆடம்பரமாகக் கருத்தைப்பற்றிக் கவலைப்படாது சொல்லழகு ஒன்றே
கருதி எழுதப்படுவது.
பழந்தமிழ் உரைநடை என்பது பண்டை
உரையாசிரியர்களான
சேனாவரையர் போன்றவர்கள் தருக்க முறையைக் கையாண்டு
சொற்சுருக்கம் கருதி மிடுக்கு நடையில் எழுதியது போல அமைவது.
செம்மாப்பு மொழிநடையாவது செருக்கினால் எளிதாகக்
கூறுவதையும், முயன்று பல்லுடைக்கும் முறையில், கடின சந்திகளைச்
சேர்த்து எழுதுவதாகும்.
கருத்தைத் தெளிவாகக் கூறுவதையே முதன்மையாகக் கொண்டு
நன்கு சிந்தித்து எழுதுவதைத் தெளிவு நடை எனலாம். ஜான் மார்லி
என்ற ஆங்கிலப் பேரறிஞர் தெளிவு நடையையே தலைசிறந்ததாக
மேற்கொள்ளுமாறு கூறியுள்ளார். கருத்துத் தெளிவு இருந்தாலன்றி
இந்தத் தெளிவு நடை கைவரப் பெறுதல் இயலாது.
மொழி நடை, எழுதுவோரின் தன்மையையும் மனப்பண்பையும்
மொழிவது. எழுத்தாளர் உளப்பாங்கும் உணர்ச்சியும் எப்படியோ,
அப்படியே எழுதும் மொழிநடையும் அமையும் என்பதில்
ஐயமில்லை. ஆடம்பரத்தை விரும்புபவர் அடுக்கு அலங்கார
மொழி நடை எழுதுவர். அடக்கமுடைய சான்றோர்
|