பக்கம் எண் :

388நல்ல தமிழ் எழுத வேண்டுமா?

‘‘கார்மேகத்தின் இடையே இலங்கும் கதிரொளி போன்று
இரக்கமற்ற அரக்கர் வாழ்ந்த இலங்கை மாநகரில் ‘திரிசடை’ என்னும்
நல்லாள் தோன்றினாள். அம் மங்கை இளமையிலேயே விபீஷணன்
தனயை என்னும் தகைமைக்கு ஏற்ற அறிவும் சீலமும் வாய்ந்து
விளங்கினாள்; மதுக்குடம் மலிந்த இலங்கை மாநகரில் மயக்குங்
கள்ளைக் கண்ணெடுத்தும் பாரத கன்னியாக அமைந்தாள்; ஊனைத்
தின்று; ஊனைப் பெருக்கும் அரக்கர் நிறைந்த நகரில் புலால் உணவை
அறவே ஒழித்த புனிதவதியாக இலங்கினாள். இத்தகைய நல்லொழுக்கம்
வாய்ந்த நல்லாள், அழகினும் சிறந்து நாளொரு மேனியாக வளர்ந்து
வந்தாள்”.

- டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை.

‘‘தமிழ் நாட்டில் ஆரியர் தமிழர் பிரிவு பெரிதும் பேசப்படுகிறது.
ஆரியர் தமிழ் நாட்டில் புகுந்ததைச் சரித்திர உலகம் கூறிக்
கொண்டிருக்கிறது. அதை வாழ்விடை ஏன் பாராட்டிப் பகைமை
கொள்ளல் வேண்டும்? ஆரியர் தமிழ் நாட்டில் குடி புகுந்து பல்லாயிரம்
ஆண்டுகளாகி விட்டன. இப்பொழுது ‘தூய ஆரியர் இன்னார்; தூயதனித்
தமிழர் இன்னார்’ என்று எவரே பிரிக்கவல்லார்? ஒரு நூறாண்டு
ஓரினத்தாரும் மற்றோர் இனத்தாரும் ஓரிடத்தில் வாழ நேரின், அவர்
தம் தனிமையும் இவர் தம் தனிமையும் மறைந்து கலந்த இனம்
உருக்கொண்டு எழும். இயற்கை நிலை இவ்வாறாகப் பல்லாயிரம்
ஆண்டுகளாய்த் தமிழ் நாட்டில் வாழ்ந்து வரும் ஆரியருக்கும்
தமிழருக்கும் கலப்பு ஏற்பட்டிராது என்று கருதுவது
மதியுடைமையாகுமோ?”

- திரு. வி. கலியாண சுந்தரனார்.

‘‘பழைய காலத்தே தமிழ் மக்கள் கப்பல் செய் தொழிலிலும்
வல்லவராயிருந்தனர். ‘‘கலஞ்செய் கம்மியர்”, ‘‘கலம்புணர் மாக்கள்”
என வரும் மணிமேகலைத் தொடர்களால் இஃதுணரப்படும். கப்பல்
நடுக்கடல் சென்று திரியுங்காலத்தே திசை தடுமாறாது கரை
சேர்தற்கு அனுகூலமாகக் காவிரிப்பூம்பட்டினத்தில் கலங்கரை
விளக்கம் அமைக்கப்பட்டிருந்தது என்பது சிலப்பதிகாரக்