கடலாடு காதையில் காணலாம். சென்னை முதலிய பெரும்
பட்டினங்களில் இக்காலத்து வைக்கப்பட்டுள்ள ‘லைட் ஹௌஸ்’
போன்றதே இவ்விளக்கம்.”
- மு. இராகவ ஐயங்கார்.
‘‘டாக்டர் கால்டுவெல் என்னும் ஆங்கிலப் பாதிரியார்
திருநெல்வேலி ஜில்லாவில் இடையன்குடி என்னும் இடத்தில்
நெடுநாள் வதிந்திருந்தார். அவர் தமிழாராய்ச்சி செய்து தெலுங்கு,
கன்னடம், மலையாளம், துளுவம் முதலிய தமிழ்க் கிளை மொழிகளையும்
நன்கு கற்று இம்மொழிகளின் இலக்கணங்கள் அனைத்தையும் ஒப்பிட்டு
மொழி நூல் உண்மைக்கு ஏற்றவாறு ஒப்பிலக்கணம் என்று ஆங்கிலத்தில்
சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னரேயே* (முதற்பதிப்பு - 1856)
இயற்றியுள்ளார். அது தமிழ் மக்களால் போற்றற்பாலது”.
- கா. சுப்பிரமணிய பிள்ளை,
‘‘மக்களுயிர் வாழ்க்கைக்கு மட்டுமன்றி இந்நிலவுலகத்துள்ள
எல்லா உயிர்களுக்குமே நீரானது மிகவும் தேவையுள்ளதாய்
இருக்கின்றது. பாருங்கள்! உயிர்த் தொகுதிகளுள் மிகவும் கீழ்ப்படியான
நிலையில் இருக்கும் மரஞ்செடி கொடிகளும் புற்பூண்டுகளுங்கூடத்
தண்ணீரையே பெருங்கருவியாய்க் கொண்டு உயிர் பிழைத்து
வருகின்றன. பார்வைக்கு வெறுமையாய்த் தோன்றும் தீஞ்சுவைத்
தண்ணீரைப் பருகி அவைகளெல்லாம் கவடுங் கோடுங் கொம்பும்
வளாருந் தளிரும் இலையும் பூவும் பிஞ்சுங் காயுங் கனியுமாய்ச்
செழித்து எவ்வளவு பொலிவாய்த் தோன்றுகின்றன! நாலைந்து
ஆண்டுகள் தொடர்பாக மழை பெய்யாதுவிட நிலம் வறண்டு
போமாயின் அவைகள் எல்லாங் கரிந்து பட்டுப் போகும் என்பது
எவர்க்குத்தாம் தெரியாது! இன்னும் அம்மரங்களில் உறையும்
பறவைகளும் அவற்றின் நிழலில் உறையும் விலங்குகளும் கான்
யாறுகளிலுஞ்சுனைகளிலும் மலை வீழருவிகளிலும் இருக்குந் தெளிநீரைப்
பருகி எவ்வளவு களிப்பாய் உயிர் வாழ்கின்றன! மழைக்காலத்தில்
*ஐம்பதாண்டு என்றது கா.சு. பிள்ளை வாழ்ந்த காலத்தை ஒட்டிக்
கூறியது.
|