பக்கம் எண் :

394நல்ல தமிழ் எழுத வேண்டுமா?

K.S. சீனிவாசப் பிள்ளையவர்கள் தம்முடைய அரிய நூலாகிய
தமிழ் வரலாற்றின் முதற்பாகத்தில் தமிழ் உரை நடையைப் பற்றித்
தெளிவாக எழுதியுள்ளதையும் பாருங்கள். அவர் எழுதியதாவது :-

‘‘இனி, உரைநடை எவ்வாறு இருக்கவேண்டும் என்பதை
எனக்குத் தோன்றியவாறு சொல்லுகிறேன்... உரைநடை அல்லது
வாசகத்தை எழுதும்பொழுது வீணான சந்தியிலக்கணத்தைக்
கைவிட்டுப் பதங்களைத் தனித்தனியே எழுதவேண்டும்....
உரை நடையில் திரிசொற்பிரயோகத்தைத் தவிர்க்க வேண்டும்.
இயற்சொற்களையே பெரும்பான்மை உபயோகித்தல் வேண்டும்.
இலக்கண வழுப்புகாமல் காக்க வேண்டும். இழிவழக்கிலுள்ள
இயற்சொற்கள் இலக்கண வழுவிலவேனும் அவைகளைத் தவிர்த்தல்
வேண்டும். தமிழ்ச் சொற்கள் இருக்கப் பிற மொழிச் சொற்களைச்
சேர்ப்பது தவறேயாம்.”

- தமிழ் வரலாறு.

வி.கோ. சூரிய நாராயண சாஸ்திரியார் கூறியுள்ளதையும்
பாருங்கள். அவர் கூறியுள்ளது இது :

‘‘பிறரெல்லாம் படித்துணர்ந்து கொள்ளத்தக்க தெளிவான
நடையில் எழுதுவது யாவரும் மேற்கொள்ளத் தக்கது. அத் தன்மையான
தெளிவு நடைக்குத் திரி சொற்கள் வேண்டுவதில்லை.”

- தமிழ் மொழியின் வரலாறு.

திருக்குறள், நாலடியார், திருவாசகம் ஆகியவற்றை மொழி
பெயர்த்த டாக்டர்
G.U. போப் என்ற ஐரோப்பியர் தண்டமிழ்
மொழிக்கு இணையற்ற தொண்டு செய்த கிறித்தவச் சமயத் தொண்டர்.
அவர் 1857-ல் வெளியிட்ட தமது இலக்கண வினா விடை நூலில்
கூறியிருப்பது நமது கவனத்துக்குரியது. அவர் கூறியதாவது.