பக்கம் எண் :

உரைநடையில் கவனிக்க வேண்டுவன 395

‘‘தமிழ் பாஷையைப் பேசுவோரும் எழுதுவோரும் பிரயோகப்
படுத்துவதில் கவனிக்கத்தக்க முக்கியமான விதிகள் யாவை?

1. நாம் கருதிய பொருளை யாவரும் ஐயமின்றி எளிதில்
அறியும் பொருட்டுத் தெளிவாய் எழுத வேண்டும்.

2. இயன்ற மட்டும் அந்நிய பாஷையின் மொழிகளை நீக்கி
இயற்றமிழ்ச் சொற்களைத் தெரிந்து எழுத வேண்டும்.

3. பயன்படாத சந்தி விகாரங்களை நீக்கிவிடவேண்டும்.”

- இலக்கண வினா விடை

தமிழ் மக்களின் முன்னேற்றம் அறிவு வளர்ச்சியினால்
ஏற்படுவது. இவ்வுண்மையை உணர்ந்து எளிய நடையில், யாவருக்கும்
விளங்கும் முறையில் கட்டுரைகளை எழுதவேண்டும் என்பதறிக.