பக்கம் எண் :

396நல்ல தமிழ் எழுத வேண்டுமா?


33.
இனிய சொற்றொடரும்
மரபுத்தொடரும்

(Interesting Phrases and Idioms)
(ம - மரபுத் தொடரைக் குறிக்கும்)


அமிழ்தினும் இனிய தமிழ்மொழி
அரியபெரிய
அடி முதல் முடிவரை
அரசன் முதல் ஆண்டிவரை
அல்லும் பகலும் அனவரதமும் அழுத கண்ணும் சிந்திய மூக்கும்
அதோகதி (ம)
அடக்க ஒடுக்கமாய்
அடுப்பும் துடுப்புமாய்
(இருக்கும் சமையல் வேளை
வந்தீரே.)
அருட்செல்வமும் பொருட்
செல்வமும்
அரும்பாடுபட்டு
அரைத்த மாவை அரைப்பது அறுதியிட்டு உறுதியாய்க்
கூறுகிறாள்.
அன்றாடம் காய்ச்சி
அரைகுறையான வேலை
அக்கம் பக்கம் (பார்த்துப் பேசு.) அல்லோலகல்லோலப்பட்டு
அகமும் புறமும்
(ஒத்திருந்தான்.)
அவலை நினைத்து உரலை
இடிக்கிறான். (ம)
(ஒன்றையெண்ணி ஒன்றைச்
செய்தல்.)
அங்கும் இங்கும் எங்கும்
அவசரக் குடுக்கை (ம)
அருந்தவப் புதல்வன்
அருமை பெருமை


ஆதி அந்தம் இல்லா
ஆக்கமும் ஊக்கமும் (அளித்தான்)
ஆகாயத் தாமரை (ம)
ஆண்டி முதல் அரசன் வரை
ஆதியோடு அந்தமாக
ஆரம்ப சூரத்துவம்
ஆர அமர யோசித்து
ஆயிரங்காலத்துப் பயிர் (ம)
ஆடை அணிகள்