பக்கம் எண் :

இனிய சொற்றொடரும் மரபுத் தொடரும் 397

ஆவதும் அழிவதும்
ஆடல் பாடல்
ஆலாய்ப் பறத்தல் (ம)
ஆலா (ஒரு வகைப் பறவை)


இரவு பகலாக (உழைக்கிறான்.)
இரும்புண்ட நீரானார்.
(வைணவ மரபு) (இறந்தார்).
இயற்கை எய்தினார்.
(மறுமலர்ச்சிக்கால மரபு)
இறைவன் திவடி
நீழலெய்தினார். (ம)
இமயம் முதல் குமரி வரை
இமாலயத் தவறு (ம)
இந்திர ஜாலம் (ம)
இடம் பொருள் ஏவல்
இணைபிரியாத நண்பர்கள்
இன்பம் துன்பம்
இரவு பகலாக
இல்லறம் என்னும் நல்லறம்
இந்திரன் சந்திரன்
இடுதேளிடுதல் (ம)
(இல்லாதது கூறுதல்)
இழிபறி நிலை (கட்சி
பெரும்பான்மை ஏற்படுவதற்கு இழிபறி நிலைஏற்பட்டிருக்கிறது.)

ஈடு இணையற்ற
ஈடு எடுப்பற்ற
ஈருடலும் ஒருயிருமாய்
ஈகை இரக்கம்


உடல் பொருள் ஆவி அனைத்தும்
உடும்புப் பிடியாகப்
(பிடித்துக் கொண்டிருக்கிறார்.)
உன்ன உன்ன (உள்ளம்
குழைகிறது.)
உலக்கைக் கொழுந்து (ம)
உருத்திராட்சப் பூனை (ம)
உலை வைத்தல் (ம)
உமி குற்றிக் கை
வருந்தல் (ம) (வீண்)
உள்ளத்தைக் கொள்ளை
கொண்ட
உண்ண உணவின்றி,
உடுக்க உடையின்றி,
இருக்க இடமின்றி
உருட்டிய கண்களும்
உருவிய வாளுமாக

ஊண் உறக்கம் இன்றி (உழைக்கிறான்.)
ஊமை கண்ட கனா (ம)
(சொல்ல முடியாதது)
ஊக்கமும் உற்சாகமும்

எச்சில் கையால் (ஈயும் ஒட்ட மாட்டான்.) (ம)
எலியும் பூனையுமாக
எட்டாம் இடத்தில் குரு (ம) (அதிர்ஷ்டம்)