பக்கம் எண் :

446நல்ல தமிழ் எழுத வேண்டுமா?


ஜான்சன் வாழ்க்கை வரலாற்றைப் படித்துவிட்டு, ‘இந்நூலில் நான்
அறிந்த உண்மையான ஜான்சனையே காண்கிறேன்’ என்றாராம்.
இத்தகைய தன்மையே பெரும்பாலான மேலைநாட்டு வாழ்க்கை
வரலாறுகளில் காணப்படுவது. வாழ்க்கை வரலாற்றில் உண்மைகளைக்
கூற வேண்டும் என்று சொல்வதால் வெளியிடத்தகாத
செய்திகளனைத்தையும் எழுதிவிட வேண்டும் என்று கொள்ளுதல்
ஆகாது. இன்றியமையாத உண்மைகளைக் கூறுவதில் தவறில்லை.
பெரும்புலவர் ஒருவர் பிறப்பிலே முடமாக இருந்தார் என்று உண்மை
கூறுவது தவறா? வறுமைக் கடலில் விழுந்து வழி தெரியாது ஆழ்ந்து
போக இருந்த ஒருவர், பெருமுயற்சி செய்து வறுமைக் கடலை
நீந்திக் கரையேறினார் என்று கூறுவது குற்றமாகுமா? மிகமிகப்
பாடுபட்டு ஒருவர் பெரும் புலவரானார் என்று குறிப்பிடுவது
இழுக்காகுமா? ஆகாது.

நம் நாட்டில் உண்மை வாழ்க்கை வரலாறு எழுதுவது மிக மிகக்
கடினம். உண்மையைக் கூறினால் குறை கூறி விட்டதாகக் கருதுவர் பலர்.
நம் மனம் இன்னும் பண்படாத காரணத்தால் உண்மை வரலாறுகள்
வெளிவருவது இந்த நூற்றாண்டில் எதிர் பார்க்கக் கூடியதாக இல்லை;
அடுத்த நூற்றாண்டில் வரலாம் போலும். என்றாலும், ஒரு சிலரது
உண்மை வாழ்க்கை வரலாற்றை எழுத முற்பட வேண்டும்.

இப்பொழுது வாழ்க்கை வரலாறு எழுதுகிறவர்கள் முற்காலத்தில்
எழுதியது போன்ற ஒருவர் வாழ்க்கையில் நடந்த எல்லா
நிகழ்ச்சிகளையும் விடாது தொடர்ச்சியாக எழுதாமல், வாழ்க்கை
வரலாற்றுக்குரியவர் வாழ்ந்த காலநிலையும், அக்காலம் எவ்வாறு
அவரை உருவாக்கியது என்பதையும், அவருடைய இளமை முதுமை
மனநிலைகள் எங்ஙனம் இருந்தன என்பதையும், எப்படி எல்லாம் அவர்
முயன்று நூலை எழுதி எத்தனை முறை திருத்தித் திருத்தி வெளியிட்டார்
என்பதையும்