குறிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளார்கள்.
மில்டன் என்ற
பெருங்காப்பியக் கவிஞர் பெருமான் நூறு தலைப்புகளை எழுதி
எழுதி முடிவில் ‘வீட்டிழப்பு’
(Paradise Lost)
என்னும் பெருங்காப்பியத்தை
இயற்ற முடிவு செய்தாராம். பிரௌனிங் என்ற மற்றொரு கவிஞர்
செய்யுள் இயற்றுவதற்குச் சொற்களைச் சேகரிப்பதற்காக ஆங்கில
அகராதியையே நெட்டுருப்போட்டு விட்டாராம். கீட்ஸ் என்ற
இளங்கவிஞர் பலமுறை தம் பாடலின் அடிகளைத் திருத்தினாராம்.
இத்தகைய முறையில் ஆங்கில நாட்டுக் கவிஞர்களுடைய
வரலாறுகள்
எழுதப்பட்டுள்ளன.
நாமும் அம்முறையைப் பின்பற்றலாம். டாக்டர். உ.வே.
சாமிநாத
ஐயரவர்கள், மீனாட்சிசுந்தரம் பிள்ளை வரலாற்றில் ஆசிரியர் தமக்குப்
பாடம் கற்பித்த முறைகளையும், புராணங்கள் இயற்றிய
வழிகளையும்,
எண்ணெயைக் காய்ச்சித் தலைமுழுகிய பழக்கத்தையும், இவை
போன்ற பலவற்றையும் எழுதியுள்ளார்கள.
வாழ்க்கை வரலாறு எழுதுகிறவர்கள்,
எவரைக் குறித்து எழுத
வேண்டுமோ அவரை நேரில் சந்தித்துப் பார்த்துப் பல நாள்கள்
அவருடன் பழகியவராயும் அவரைப்பற்றி நன்கு அறிந்தவராயும்
இருக்க வேண்டும். அவரைப்பற்றி மிகைப் படுத்தியோ குறைவு
படுத்தியோ கூறுதல் கூடாது; அவரைக் குறித்து
வெளியிடத்
தகாதவற்றை வெளியிடுதலுமாகாது.
நேரில் பார்த்து எழுதுவது
எப்பொழுதும் இயலுமா? இயலாது.
இறந்து விட்டார்கள் வாழ்க்கை வரலாறுகளை எழுத வேண்டுமானால்
என்ன செய்வது? இறந்தவர் வாழ்க்கை வரலாற்றை எழுதுவோர்
அவரை அறிந்தவர்களிடம் அவரைப் பற்றிய உண்மைச் செய்திகளைக்
கேட்டுச் சேகரிக்க வேண்டும்; அவர் எழுதிய கடிதங்கள்
கிடைக்குமானால் அவற்றைத் தேடிப் பிடித்து அவற்றிலிருந்து சில
அறிய செய்திகளைத் திரட்ட வேண்டும்; கால நிகழ்ச்சியை மாற்றாமல்
பிறந்த காலநிலை,
|