39.
நகைச்சுவை இலக்கிய எழுதுதல்
வாழ்க்கை என்பது வேலை
ஓய்வு, இன்பம் துன்பம், வெற்றி
தோல்வி, அலைச்சல் அமைதி இவற்றால் ஆனது.
துன்பமே இவ்வாழ்வு
என்னும் துன்ப நோக்கு
(Pessimistic Outlook)
வாழ்க்கையில்
ஊக்கமளிக்காது. வாழ்க்கை இன்பமானது
(Optimistic Outlook)
என்று
எண்ணும் எண்ணமே இவ்வுலக வாழ்வை இன்பமாக்கவல்லது. நல்ல
வகையில் உண்டாகும் இன்பமே வாழ்க்கைக்குத் தேவையானது.
எனவே, மக்கள் எழுத்திலும் பேச்சிலும் இன்பம் நாடுவது இயல்பு.
நாலடியார் என்னும் நூலில் உள்ள கீழ்வரும் பாடல்.
‘‘உளநாள் சிலவால்; உயிர்க்கு ஏமம் இன்றால்;
பல் மன்னும் தூற்றும் பழியால் - பலருள்ளும்
கண்டாரோடு எல்லாம் நகா அது எவன் ஒருவன்
தண்டித் தனிப்பகை கோள்?”
என்கிறது. இப்பாடல், ‘பலருள்ளும் கண்டாரோடு பகை கொள்ளாது
மகிழந்து சிரித்துப் பேசி வாழ்’ என்று நமக்கு அறிவுறுத்துகிறது.
ஆதலால், நாம் வாழ்க்கையில் மகிழ்ச்சி ததும்ப வாழும் முயற்சியை
மேற்கொள்ள வேண்டும் என்பது விளங்கும். எனவே, நாளிதழ்களும்
வார மாத வெளியீடுகளும் கற்பாருக்கு நகைச்சுவை
அளிக்கத்தக்க
கட்டுரைகளையும் கதைகளையும் வெளியிடுகின்றன.
நகைச்சுவைபட எழுதுதல் எளிதன்று. ‘பட’ என்னும்
சொல்லுக்கு ‘உண்டாகுமாறு’ என்றும், ‘இல்லாது போகுமாறு’
என்றும் இரு பொருளுண்டு. நகைச்சுவை தோன்றச் சிலர்
ந30
|