என்று ஓரு வெண்பாவை நகைச்சுவை மலிய இயற்றினார்.
வேதநாயகம் பிள்ளையும் பிற்காலத்தில் பல
நகைச்
சுவைப்பாக்களைப் பாடியுள்ளார். அவற்றுள் ஒரு செய்யுள்
கீழ் வருமாறு;
‘‘இட்டமுடன் முதலியார் வாங்கிவந்த காளைதினம்
இருபோர் தின்னம்;
சட்டமுடன் கொள்ளுண்ணும்; புல்லுண்ணும்; அதைப்பாண்டி
தன்னிற் பூட்டக்
கிட்டவரின் முட்டவரும்; தொட்டவர்மே லேசாயும்;
கீழே விழும்;
எட்டாள்கள் தடிகொண்டு தாக்கிடினும் தூக்கிடினும்
எழுந்தி ராதே.”
தமக்காக ஒருவர் வாங்கிவந்த காளை மாட்டைப் பற்றி வேதநாயகம்
பிள்ளை பாடியது இது. இப்படிக் கி.பி. 19-ஆம் நூற்றாண்டு வரையில்
பாட்டிலே பெரும்பாலும் புலவர்கள் நகைச்சுவை
அமையப் பாடினார்கள்.
கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் வீரமாமுனிவர் உரை
நடையில்
‘பரமார்த்த குரு கதை’யை நகைச்சுவை அமைய எழுதி வெளியிட்டார்.
இதில் குதிரை முட்டை வாங்கியது முதலிய கதைகள் உண்டு.
19-ஆம் நூற்றாண்டில் வேதநாயகம் பிள்ளை, வீராசாமி செட்டியார்
ஆகியவர்கள் நகைச்சுவைக் கதைகள் இயற்றினார்கள். தாண்டவராய
முதலியாரும் இத்தகைய கதைகள் எழுதினார். வீராசாமி செட்டியார்
இயற்றிய விநோத ரச மஞ்சரி, இலக்கியத்துக்குச் செய்த தீமை மிகப்
பெரியது. அவர் வேடிக்கையாய் எழுதிய கம்பர்,
ஒளவையார்
கதைகளை மக்கள் உண்மைக் கதைகளாகவே நம்பிவிட்டார்கள்.
20-ஆம் நூற்றாண்டில்தான்
சிறந்த நகைச்சுவைக் கட்டுரைகள்
தோன்றலாயின. வார வெளியீடுகள் இத்துறையில்
பெருந்தொண்டு
புரிந்து வருகின்றன. இத்துறையை நாம்
|