இழிவு படுத்தலும் கூடாது; சீர்திருத்தும் நோக்கமுடையதாதல்
வேண்டும்.
நகைச்சுவை, அறிவு நிலைக்கு
ஏற்றவாறு வேறுபட வேண்டும்.
பெண்களுக்கு எழுதுவது ஒரு வகை. மாணவர்களுக்கு எழுதுவது
ஒருவகை; கிராம மக்களுக்கு எழுதுவது ஒரு வகை. அறிஞர்களுக்கு
எழுதுவது ஒரு வகை. நடையுடைகளைப் பற்றி நகைச்சுவைக்
கட்டுரைகள் எழுதலாம். காக்கை பிடித்து ஏய்த்து வாழ்தலைப்
பற்றி எழுதலாம் ஆமாம் பாட்டுப் பாடி ஒத்தூதுவாரைக்
குறித்தும்
எழுதலாம்.
இப்படி எழுதும் பொழுது சொற்றொடர்களாலும், புகழ்வது போல
இகழும் முறையாலும், வேடிக்கைப் பேச்சினாலும் நகைச்சுவை
தோன்றச் செய்யலாம். எதை எழுதினாலும் பிழையற நல்ல தமிழில்
எழுத மறத்தலாகாது, நகைச்சுவை எழுத்தாளர் இம்முறையில்
நல்ல
நகைச்சுவை இலக்கியங்களை இயற்றித் தமிழர்
மன்பதைக்கு
இன்பம் ஊட்டுவார்களாக!
|