திருக்கோவையார்க்கு உரை எழுதி பேராசிரியர் ‘கண்டார்க்கு இன்பம்
செய்தலின் நாடகம் என்றார்’ என நாடகம் என்னும் சொல்லுக்கு
இன்பம் என்னும் பொருள் உரைத்தார். தொல்காப்பியம் என்னும்
தமிழ் இலக்கண நூலில்,
‘‘நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலன்நெறி வழக்கம்”
என்னும் நூற்பா உளது. அதில் வரும் ‘நாடக வழக்கு’ என்னும்
தொடருக்குப் புனைந்துரை வழக்கு என நச்சினார்க்கினியர்
உரை கூறியுள்ளார்.
ஆனால், கி.பி. 9-ஆம் நற்றாண்டின்
பிற்பகுதியில் வாழ்ந்த
மாணிக்கவாசகர், ‘‘நாடகத்தால் உன் அடியார் போல் நடித்து”
என்று திருவாசகத்தில் பாடியிருக்கிறார். இதை நோக்கும்போது
நாடகம் என்னும் சொல் பிற்காலத்தில் ‘நடிப்புக்குரியது’ என்னும்
பொருளில் வழங்கி வந்ததாய் அறிகிறோம்.
நாடக நூல்கள் அக்காலத்தில்
இருந்தனவாகத் தெரியவில்லை.
சிலப்பதிகாரத்தில் காணப்படுவது நாட்டியக்கூத்தே
அன்றி நாடகம்
அன்று என்று உறுதியாகக் கூறலாம். ‘கூத்தாட்டு அவை குழாத்தற்றே’
என்னும் திருக்குறள் தொடரும், ‘விளியாதான் கூத்தாட்டுக் காண்டலும்’
என்னும் திரிகடுகச் செய்யுள் நூலில் உள்ள பாட்டின் அடியும் அந்நாளில்
கூத்து நடந்ததைத் தெரிவிக்கின்றன. ஒருவேளை நாடக நூல்கள்
இருந்து மறைந்து போயினவோ என்று தெரியவில்லை. பழந்தமிழ்
நாடக நூல் ஒன்றும் இன்று நமக்கு இல்லை.
வடமொழியில் பாசகவி இயற்றிய பண்டை நாடகங்கள்
இருக்கின்றன. பாசகவி கி.மு. முதல் அல்லது இரண்டாம்
நூற்றாண்டில் இருந்தவர். இவர் 13 நாடகங்களை
இயற்றினாராம்.
சொப்பன வாசவதத்தம், அபிஷேக நாடகம், பிரதிமா
நாடகம்
|