பக்கம் எண் :

458நல்ல தமிழ் எழுத வேண்டுமா?

தமிழ் நாடக மேடைகளில் பற்பல ஆண்டுகளாக நடித்து
வந்த நாடகங்களுள் பெரும்பாலானவை நடிப்பைக் கருதாமல்
பாட்டுக்கே இடமளித்த நாடகங்களாய் இருந்தன. ஒரு சிலரே
நாடகத்துக்கும் கதைக்கு ஏற்ற பிற்புலத்தையும்
(Back-ground),
வழக்க பழக்கங்களையும் அமைத்து நடிப்புக்கு முதன்மை அளித்தனர்
எனலாம். பெரும்பாலான நாடகங்கள் கூத்துகளாகவே இருந்தன.
திரைப்படம் வந்த பின்னரே தமிழ் நாடகங்களில் நடிப்புக்கு
முதன்மையிடம் அளிக்கப் படலாயிற்று.

ஆங்கில நாட்டில் தலைசிறந்த நாடகங்கள் கி.பி. 16-ஆம்
நூற்றாண்டில் உலகம் புகழும் ஷேக்ஸ்பியர் கவிஞர் பெருமானால்
இயற்றப்பட்டன. அவருக்குப் பின்பு அங்கே நாடகங்கள்
வளர்ச்சியுறலாயின். நகைச்சுவைக் குறுநாடகங்களும்
(Farces)
தோன்றி வளர்ந்தன. சில ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த
பெர்னாட்ஷா தலைசிறந்த நாடக நூலாசிரியராக விளங்கியது
உலகம் அறியும். அவர் தமது நாடக நூல்களால் பெரும் பொருள்
திரட்டினார்.

நாடகம் என்றால் என்ன? ஒரு கதையை எடுத்துக் கொண்டு,
கதைமாந்தர்களுக்கு எல்லாம் நடிகர்களை அமைத்து
உரையாடல்களாலும் செயல்களாலும் அக் கதைப் பொருளைப் பலர்
காண அரங்கத்தில் நடித்துக் காட்டுவதையே நாடகம் என்கிறோம்.
நாடகத்தில் நடிப்பே முதன்மை பெறவேண்டும். ‘ஹாம்லெட்’
என்னும் நாடகத்தில் ஷேக்ஸ்பியர், ‘‘சொற்களை நடிப்புக்கு
ஏற்றவாறு பேசவேண்டும். பேசும் பேச்சுக்குத் தகுந்தபடி நடிப்பு
இருக்கவேண்டும். வாழ்க்கையை இயற்கைக்கு மாறுபடாமல்
சித்தரிக்க வேண்டுவது நாடகத்தின் முதல் வேலை” என்று
நாடகத்தின் இலக்கணத்தை வரையறுத்துக் கூறியுள்ளார். ஆதலால்,
நாடகத்தில் நடிப்பையே முதன்மையாகக் கருத வேண்டும் என்றறிக.
நடிப்பையே முதன்மையாகக் கருதுமாறு