பக்கம் எண் :

நாடகம் எழுதும் நன்முறை 459


நாடகம் எழுதப்படவேண்டும். பொருத்தமான இடங்களில் மட்டும்
ஒன்றிரண்டு பாடல்கள் இருக்கலாம். நாடகத்தில் பாடல்களை
எதிர்பார்ப்பது நாகரிகமன்று; முறையுமன்று.

உரையாடல், நாடகத்தில் நீண்டிருத்தல் கூடாது;
சுருக்கமாக இருக்கவேண்டும். நீண்டிருந்தால் பேச்சை நடிகர்கள்
மனப்பாடம் செய்வது கடினமாகும்.

குணங்களைப் பேச்சுகளால் சித்தரித்துப் புலப்படுத்த
வேண்டும். ஷேக்ஸ்பியர் தம்முடைய நாடகங்களில் குணங்களைச்
சித்திரித்து வளர்த்துச் செல்வதை மிகுதியாகக் காணலாம்.

சாதாரணமாக ஷேக்ஸ்பியர் நாடகங்களில் ஐந்து அங்கங்கள்
இருக்கும். இப்போது நாடகம் எழுத விரும்புகிறவர்கள் மூன்று
அங்கங்களில் நாடகங்களை இயற்றலாம்; முதல் அங்கத்தில்
தோற்றமும், இரண்டாவது அங்கத்தில் உச்ச நிலையும், மூன்றாம்
அங்கத்தில் முடிவும் அமையுமாறு எழுதலாம். அங்கங்களே இன்றி
எழுதும் முறையும் உண்டு. சிறிய நாடகமாக இருந்தால் ஓரங்க
நாடகமாக எழுதலாம்.

பிற்புலம் அந்த அந்தக் காலத்துக்கு ஏற்றவாறு பொருத்தமாக
இருத்தல் மிகமிக இன்றியமையாதது. வீடு, உடை முதலிய எல்லாம்
கதையின் காலத்துக்குப் பொருத்தமாக இருக்கவேண்டும். பீமன்
கிராப் தலையுடன் காட்சியளிப்பது, சந்திரமதி கைக்கடியாரத்துடன்
தோன்றுவது, இராமாயண காலத்து அரண்மனையில் குரோட்டன்
செடியுள்ள பூந்தொட்டிகள் இருப்பது போன்றவை அருவருக்கத்தக்கவை.
கி.பி. 12-ஆம் நூற்றாண்டுக் கதையோ, சங்ககாலக் கதையோ
நாடகமாக எழுதினால், அந்த அந்தக் கால நூல்களையும் படங்களையும்
உருவ அமைப்புகளையும் ஆராயந்து பிற்புலம் அமைக்கவேண்டும்.

நாடகமானது இன்பியல் நாடகம் (Comedy) என்றும் துன்பியல்
நாடகம்
(Tragedy) என்றும் இருவகைப்படும். இன்பமாக முடிவது
இன்பியல் நாடகமாகும். இன்ப நிகழ்ச்சிகளே