மிகவும் இன்பியல் நாடகத்தில் இருக்கும். துன்ப முடிவில் அமைவது
துன்பியல் நாடகம். அவரவர் வாழ்வின் வெற்றிக்கும் வீழ்ச்சிக்கும்
அவரவர் குணங்களே காரணமாகின்றன
(Character is destiny)
என்னும்
உண்மையை அடிப்படையாகக் கொண்டே துன்பியல் நாடகங்களை
அமைத்தார் ஷேக்ஸ்பியர்.
நகைச்சுவைக் குறுநாடகங்கள் தமிழில் இல்லை.
பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் நடிக்கத் தக்கவாறு இந்நாடகங்கள்
மிகுதியாக வெளிவர வேண்டும். இவை இன்றைக்கு வேண்டிய
தேவையுமாகும்.
சமுதாயக் குறைகளை எடுத்துக் காட்டும் முறையில் நாகரிகமாக
அமைந்த நகைச்சுவைக் குறுநாடகங்கள் எழுதப்படவேண்டும்.
ஆங்கிலத்தில் 18-ஆம் நூற்றாண்டில் ஷெரிடன் என்பார்
இத்தகைய நாடகங்களை எழுதித் திறம்பட நடித்தார் என ஆங்கில
இலக்கிய வரலாற்றில் காண்கிறோம்.
இக்காலத்தில் கருத்து நாடகங்கள் வெளிவருகின்றன. இவற்றில்
சீர்திருத்தக் கருத்துகள் உரையாடல்களாகக் காணப்படுகின்றனவேயன்றி,
நாடக நல்லிலக்கணங்கள் காணப்படவில்லை. கருத்து நாடகங்கள்
நன்முறையில் எழுதப்பட வேண்டும்.
நாடக ஆசிரியராக விரும்புவோர் வாழ்க்கையைக்
கூர்ந்து
கவனிக்கவேண்டும்; சிந்தனையாளராக இருக்க வேண்டும். தமிழிலக்கிய
அறிவும் நிரம்பப் பெற வேண்டும்; நடைமுறைக்கு வேண்டிய
இலக்கணமும் தெரிந்துகொள்ள வேண்டும். இளம் எழுத்தாளர்கள்,
இத்திறமைகள் பெற்று நல்ல தமிழில் எளிய நடையில் நாடக
இலக்கணங்கள் நன்கு பொருந்த நடிப்புக்கே முதலிடம் தந்து,
பாடல் ஒன்றிரண்டே அமைத்துக் குணச்சித்திரங்களைக் காட்டி,
உணர்ச்சியே உயிராக விளங்குமாறு நல்ல கருத்தமைந்த
நாடகங்களையும் நகைச்சுவைக் குறுநாடகங்களையும் எழுதித் தமிழ்
அன்னைக்கு அணிசெய்து தண்டமிழ் நாட்டுக்கும் ஒண்டமிழ்
மொழிக்கும் தொண்டு புரிவார்களாக!
|