41.
எழுத்தாளர்களுக்கு
தமிழ் மகள் செய்த நற்றவப்பயனால்
இற்றை நாள் தமிழகத்தில்
பற்பலர் எழுத்தாளர்களாகத் தோன்றிக் கொண்டிருக்கின்றனர்;
தமிழ்
எழுத்தாளர் மாநாடு கூட்டிப் பற்பல செயல்களைக்
குறித்து
ஆராய்கின்றனர். முதிய எழுத்தாளர்கள் ஒரு பக்கம் இருக்க,
இளம் எழுத்தாளர்கள் மற்றொரு பக்கம் தோன்றி
கொண்டிருக்கிறார்கள். எழுத்தாளர்கள் பெருகி வருவது, அருந்தமிழ்
மொழியின் வருங்கால முன்னேற்றத்துக்கு விழுமிய பயனளிக்கும்
என்பதில் ஐயமில்லை.
சிறுகதை, நெடுங்கதை எழுதுவோர், வார மாத வெளியீடுகளுக்குக்
கட்டுரை எழுதுவோர், திறனாய்வோர்
(Critics),
திரைப்பட உரைநடை
(வசனம்) இயற்றுவோர் அனைவரும் எழுத்தாளர்கள் எனப்படுகின்றனர்.
இன்று எழுத்தாளர் என்றால் தமிழ் இலக்கணம் இலக்கியம்
அறியாது
எழுதுகிறவர்கள் அல்லது தமிழ் மரபுக்கு மாறாக எதையும்
இயற்றுகிறவர்கள் என எண்ணம் தோன்றிவிட்டது. 1954-ல்
சென்னையில் நடைபெற்ற இரண்டாவது எழுத்தாளர் மாநாட்டிற்குத்
தலைமை தாங்கிய ‘கல்கி’ ஆசிரியராய் இருந்து மறைந்த அறிஞர்
ரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தமது தலைமையுரையில்,
‘‘எழுத்தாளர்களுக்குத் தமிழ் இலக்கியங்களில் போதிய பாண்டித்தியம்
இருப்பது அவசியம்” என்றார்கள். எழுத்தாளர்கள், அன்று அவர்கள்
கூறியதை என்றும் மனதில் இருத்த வேண்டும். இதனுடன் எழுத்தாளர்கள்
நடை முறைக்கு வேண்டிய போதுமான அளவு இலக்கண அறிவும்
பெற வேண்டுவது இன்றியமையாதது என்று உணரவேண்டும். இலக்கியம்
ஓரளவு தெரிந்து நடைமுறைக்குப் பயன்தரும் இலக்கணம் அறிந்து, நல்ல
தமிழில் எழுத வல்ல எழுத்தாளர்கள் எழுதும் நூல்களும்
கட்டுரைகளுமே மதிப்புப்பெறும்; நின்று
|