நிலைக்கும். இலக்கணமே கற்க வேண்டுவதில்லை
என்று ஒரு சிலர்
கூறும் மதிக்கத்தக்கதன்று. கொச்சைத் தமிழில் தவறுகளுடன்
எழுதுவதில் உயிருண்டு என்று சிலர் சொல்வதையும் எழுத்தாளர்கள்
ஏற்று எழுதலாகாது. தமிழே படிக்காமல் உயர்நிலைப் பள்ளியிலும்
கல்லூரியிலும் வடமொழிப் பாடம் எடுத்துத் தேறியவர்கள், தமிழ்
இலக்கியம், இலக்கணம் கற்காமல் எழுத்தாளராக வருவது
தமிழன்னைக்குச் செய்யும் தீமையாகும் என்றால் மிகையாகாது. தமிழ்
எழுதத் தெரிவது மட்டும் போதாது. ஆங்கிலப் பயிற்சி மிகுதியாக
இருப்பதும் போதாது. தமிழ் இலக்கிய இலக்கணம் ஓரளவாவது
அறியாதவர்கள் தமிழ் எழுத்தாளராகத் தொண்டாற்றினால், அவர்கள்,
பாவம்! எப்படி நல்ல தமிழ் எழுத முடியும்? வேறு பல
திறமைகள்
பெற்றிருந்தாலும், அவர்கள் பயனற்றவர்களாகிறார்கள்.
ஆதலால்,
தமிழ் எழுத்தாளர்கள் தமிழ் இலக்கிய இலக்கணங்களைப்
போதிய
அளவாவது கற்க வேண்டும் என்றறிக.
பண்டைக் காலத்தில்
இலக்கணம் இலக்கியம் அறிந்தவர்களையே
தமிழகத்தில் எழுத்தாளர்கள் என்றார்கள்.
அகநானூற்றில் 84-வது
பாட்டைப் பாடியவர் மதுரை எழுத்தாளான் என்று குறிக்கப்பட்டுள்ளார்.
அதே பண்டை நூலில் மதுரை எழுத்தாளன் சேந்தன் பூதனார்
207-ஆம் பாடலை இயற்றியதாய்க் காண்கிறோம். நன்னூல்
எழுத்ததிகார உரையின் இறுதியில் உள்ள ஒரு செய்யுள்,
எழுத்திலக்கணம் தெரிந்தவர்களையே எழுத்தறிவார் என உரைக்கின்றது.
இங்கே எழுத்தாளர் என்பது பிழையின்றி நூல்களைப் பார்த்து
ஏடு
எழுதியவர்களையே
(Copyist)
குறிப்பதாகும். எழுத்துப்பிழை,
சந்திப்பிழை முதலியவை இல்லாது எழுதுவதற்கு எழுத்திலக்கணம்
வேண்டியிருந்ததால், அவர்களுக்கு எழுத்திலக்கணம்
வற்புறுத்தப்பட்டது. எழுத்தாளர் சிலர் அக்காலத்தில்
கவிஞர்களாகவும் இருந்தார்கள் என்று காண்கிறோம். நூலைப் பார்த்துப்
படி
(Copy)
எடுத்தவர்களுக்கே இலக்கணம்
வற்புறுத்தப்
பட்டதென்றால் சிறுகதை, நெடுங்கதை, நாடகம்,
கட்டுரை முதலிய
|