வற்றை எழுதுகிற எழுத்தாளர்களுக்கு இலக்கிய இலக்கண
அறிவு
போதிய அளவு வேண்டும் என்று வற்புறுத்தாமல் இருப்பது முடியுமா?
ஆதலால், எழுத்தாளர்கள் இலக்கிய இலக்கணங்களைக் கற்றல் மிக
மிக இன்றியமையாதது என்றுணரவேண்டும்.
பொற்களந்தை படிக்காசுத் தம்பிரான் என்பவர்,
தகுதியற்றவர்கள் புலவர்களாய்த் திரிந்ததைப் பற்றி வருந்திப்
பாடிய பாடல் ஒன்று தனிப்பாடல் திரட்டி உண்டு. அதுதான் இது:
‘‘குட்டுதற்கோ
பிள்ளைப்பாண்டியன் இங்(கு) இல்லை;
குறும்பிஅள வாய்க்காதைக் குடைந்து தோண்டி
எட்டினமட்(டு) அறுப்பதற்கோ வில்லி இல்லை;
இரண்(டு) ஒன்றாய் முடிந்துதலை இறங்கப் போட்டு
வெட்டுதற்கோ கவிஒட்டக் கூத்தன் இல்லை;
விளையாட்டாய்க் கவிதைகளை விரைந்து பாடித்
தெட்டுதற்கோ அறிவில்லாத் துரைகள் உண்டு.
தேசமெங்கும் புலவரெனத் திரிய லாமே?”
(தெட்டுதற்கு-ஏய்ப்பதற்கு)
இவ்வாறு அறிஞர்கள் பழிக்குமாறு எழுத்தாளர்கள் இன்று
தோன்றலாகாது. நல்ல தமிழில் எழுத வல்ல எழுத்தாளர்கள்
தோன்றி தமிழ்மொழிக்குத் தொண்டு செய்யவேண்டும்.
எழுத்தாளர்களாக உள்ளவர்களும் இனி எழுத்தாளர்களாக வர
விரும்புகிறவர்களும் தலைசிறந்த எழுத்தாளராய் விளங்கிய
அறிஞர்
ரா.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் அறிவுறுத்தியவாறு
‘தமிழிலக்கியத்தில்
போதிய பாண்டித்தியம் பெறுவதோடு’ நடைமுறைக்குப்
பயன்படக்
கூடிய அளவு இலக்கண அறிவும் பெற வேண்டும். அதற்கு நன்னூல்
படித்தாலே போதும். தமிழறிஞர்கள் எழுதிய உரைநடை
நூல்களைப்
பன்முறை படித்து அவர்களது உரைநடையில் காணப்படும்
நற்பண்புகளை எழுத்தாளர்கள் இக்காலத்துக்கு
ஏற்றவாறு பின்பற்றி
எளிய நடையில் பிழையின்றி
|