நல்ல தமிழில் தமிழ் மரபு குன்றாதவாறு நூல்களை எழுத முற்பட
வேண்டும். இவர்கள் இலக்கண இலக்கியங்களைப்
புறக்கணிக்கலாகாது;
தலைசிறந்த புராண இலக்கியங்களையும் படிக்க வேண்டும். தமிழில்
ஓரளவு புலமை பெற வேண்டும். ஆங்கில நாட்டுத் தலைசிறந்த
எழுத்தாளர்களாய் விளங்கிய டிக்கன்ஸ் செஸ்டர்டன், பெர்னாட்ஷா,
ஆர்னால்ட் பென்னட் முதலியோர் கல்லூரியில் போய்க்
கற்காவிட்டாலும் மிகப்பாடுபட்டுத் தங்கள் முயற்சியால் உயர்ந்த
மதிப்புக்குரிய எழுத்தாளர்களானார்கள். ஆங்கில உரை நடை
இலக்கியத்தில் திரு. வி.க. போல இனிய நடை எழுதினவர்
ஆர். எல். ஸ்டீவன்சன் என்பவர் என்பவர். இவர் முயன்று
எழுத்தாளரான வழியைக் ‘கல்லூரி வெளியீடு’ என்னும் கட்டுரையில்,
‘‘நான் குரங்கு செய்வது போல ஹாஸ்லிட், லாம்ப், டீபோ போன்ற
சிறந்த எழுத்தாளர்களுடைய உரைநடையைப் பின்பற்றி எழுதி எழுதிப்
பயிற்சி பெற்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார். ஆங்கில எழுத்தாளராய்
உலகப் புகழ்பெற்றவர் எச்.ஜி. வெல்ஸ் என்பவர். அவர்
கூறுவது
எழுத்தாளர்களுக்கும் பிறருக்கும் பயன்படும். அவர், தமக்கு எழுதும்
உணர்ச்சி வேகம் எழும்பியபோதே எந்நூலையும் எழுத முடிந்ததாயும்
எல்லா நூல்களையும் தாமே தம் கைப்பட எழுதியதாயும், ஒருவருக்குச்
சொல்லிச் சுருக்கெழுத்தால் எழுதுமாறு செய்ததில்லை என்றும்,
எழுதியதைத் திருத்தமுறும் வரையில் திரும்பத் திரும்ப
எழுதியதாயும் குறிப்பிட்டுள்ளார். ஆதலால், எழுத்தாளர்கள் தம்
குருதியைப் பொழிவதாகக் கருதி நூல்களைத் திருத்தமுறப் பிழையின்றி
எழுத வேண்டும்.
இச்சமயத்தில் இரண்டாவது எழுத்தாளர் மாநாட்டைத்
திறந்துவைத்த பேரறிஞர் ராஜாஜி அவர்கள், எழுத்தாளர்களுக்குக்
கூறிய அறிவுரை பலருக்கும் மிகமிகப் பயன்தரத் தக்கது. அவர்
கூறியதாவது:
‘‘தமிழ் எழுத்தாளர்கள் ஏராளமாக விரைந்து விருப்பம்
போல எழுதக்கூடாது என்றும், மக்கள் நல்லவர்கள்
என்னும்
|