கருத்தில் திறந்த மனப்பான்மையுடன் தூய்மையாக எழுத வேண்டும்
என்றும் திரு. பாஷ்யம் (சாண்டில்யன்) அவர்கள் வரவேற்புரையில்
கூறியது பொருத்தமானது. வெளியிடுவோர் வெளியிட மறுத்தாலும்
எழுத்தாளர் விடாது எழுத வேண்டும். எளிதில் புகழ் ஏணியில்
ஏறிவிடலாம் என்று நினைப்பது கூடாது. பணம் சம்பாதிப்பதே
எழுத்தாளர் நோக்கமாக இருத்தலாகாது.”
‘‘இலக்கியத்தில் பிரசார விஷயத்தைக் கலக்க வேண்டாம்.
தெளிவாக எழுதுங்கள். எழுதப்படும் தமிழில் பேசப்படும்
கொச்சைத்
தமிழ்ச் சொற்களைக் கலக்கக் கூடாது. தமிழ் மொழி இலக்கிய
வளர்ச்சி கருதிப் பேசும் மொழியும் எழுதும் மொழியும் உயர்ந்த
தரத்துடன் இருக்கச் செய்வது அவசியம்.”
அனுபவம் மிகுந்த முதிய எழுத்தாளரான வெ. சாமிநாத சர்மா
அவர்கள் தமது ‘எப்படி வாழ வேண்டும்?’ என்னும் நூலில்,
எழுத்தாளர்களுக்கு இன்றியமையாத தேவைகள் எடுத்துக் கூறியுள்ளதும்
இங்குக் குறிப்பிடத்தக்கது. எழுத்தாளர்கள் எந்த மொழியில்
நூல்களை எழுதுகிறார்களோ அந்த மொழியின் இலக்கியங்களை
இடைவிட்டு இடைவிட்டுப் படித்தல் வேண்டும் என்றும், அப்படிச்
செய்தால்தான் புதிய கருத்துகள் தோன்றும் என்றும், அவர்கள் எதையும்
கூர்ந்து கவனித்தல் வேண்டும் என்றும், நல்ல கருத்துகளைத்
தெளிவாகச் சொல்ல வல்லவர்களாதற்கு உள்ளத் தூய்மை தேவை
என்றும், மேலும் தன்னம்பிக்கையும் தன்னடக்கமும் பொறுமையும்
வேண்டும் என்றும், எடுத்த எடுப்பிலே இளம் எழுத்தாளர்கள் தங்கள்
நூல்களை அச்சுக்குக் கொண்டு வரவேண்டும் என்றும் எண்ணாமல்
குறைந்தது ஓராண்டாவது வைத்திருந்து அவற்றைப் படித்துப் படித்துத்
திருத்தம் செய்ய வேண்டுவதானால் திருத்துதல் வேண்டும் என்றும்,
எந்த மொழியில் பழகுகிறார்களோ அந்த மொழியின் மரபை
அறிதல்
இன்றியமையாதது என்றும் கூறியுள்ளார்.
ராஜாஜி கூறிய சிறந்த
அறிவுரையும் சாமிநாத சர்மா அவர்களது
அனுபவ உரையும் தமிழ் எழுத்தாளர்கள் மேற்
|