கொள்ளத்தக்கவை என்று சொல்ல வேண்டுவதில்லை. முதிய
எழுத்தாளர்களும் இளம் எழுத்தாளர்களும் இவ்வறிவுரைகளைப்
பின்பற்ற வேண்டும்.
இளம் எழுத்தாளர்கள் எழுத்தை நம்பி வாழ எண்ணி விடலாகாது.
நூல் எழுதுவதைப் பொழுது போக்காகவும் பற்றாட்டாகவும்
(Hobby)
கொள்ள வேண்டும். எழுத்தாளர்களாக விரும்பும் இளைஞர்கள்
இலக்கண, இலக்கியப் பயிற்சி பெறவேண்டும். இக்காலத்தில் ஒருவர்
தாமே தமிழைப் படித்துக் கொள்ள மிகுந்த வசதிகள் உண்டு.
முயற்சிதான் வேண்டும்.
இக்காலத்தில் சிறந்த எழுத்தாளர் சிலர் ஆங்கிலச் சொற்களைத்
தமிழில் மிகுதியாகக் கலந்து எழுதி வருகிறார்கள்.
தமிழ் மட்டும்
தெரிந்தவர்களுக்கு அவர்கள் எழுதுவது புரியாது;
ஆங்கிலம்
படித்தவர்களுக்குத்தான் புரியும். அத்தகையவர்கள் எழுதுவதைத்
தமிழில் எழுதப் பழக வேண்டும்.
எழுத்தாளர்கள் புலவர் பெருமக்களைப் ‘பத்தாம் பசலிகள்’
என்று எண்ணுவது தவறு. புலவர்கள் எழுத்தாளர்களைப்
பயன்
படாத பேர்வழிகள் என்று புறக்கணிப்பதும் கூடாது. சிறுகதை,
நெடுங்கதை, நாடகம் முதலியவற்றை எழுதும் எழுத்தாளர்கள்
கருவிலே திருவமைந்த செல்வர்கள். அவர்களுக்கு மொழிப்
பயிற்சி ஏற்படுமானால், அவர்கள் பொன்மலர் மணமுறுவது
போலச் சிறப்படைவார்கள்.
திருவுடைய எழுத்தாளர்களே, இன்று உள்ள தமிழிலக்கியம்
இலக்கணம் அறிந்த தலைசிறந்த எழுத்தாளர்களைப் பார்த்து, நீங்கள்
தமிழ் இலக்கியமும் நடைமுறை இலக்கணமும் பயின்று, பிழையின்றி,
நல்ல தமிழில் கூடியமட்டும் பிறமொழிச் சொற்களை நீக்கி, எளிய
நடையில் நாட்டுக்குப் பயன்படுமாறு சிறுகதை, நெடுங்கதை, நாடகம்,
திரைப்பட உரைநடை, திறனாய்வு முதலியவற்றை எழுதிப்
பிற்காலச்
சந்ததியாரின் மதிப்புக்கு இக்கால மக்களின் பாராட்டுக்கும் உரிய
முறையில் அமிழ்தினும் இனிய தமிழ் மொழியை வளர்ப்பீர்களாக!
|