42.
முடிவுரை
கருத்தில் இருத்தும் திருத்தங்கள்
எழுத்துப் பிழைகள்
தமிழகத்தில் இன்று ‘‘நல்ல தமிழில் எழுத வேண்டும்”
என்னும் நல்லுணர்ச்சி மலர்ந்து விட்டது. தண்டமிழன்னை
அரியணை ஏறி அமர்ந்து பண்டுபோல் இன்று ஆட்சி
செய்யுங்காலமும் வந்துவிட்டது. தமிழகத்தில் தமிழ் மொழி
ஆட்சி
மொழியாயிற்று. ஆதலால், மக்களிடம் வழுவின்றி
நல்ல தமிழ் எழுதும்
எண்ணம் பரவ வேண்டும். அறிவிப்புப் பலகைகளிலும்
திரைப்பட
அறிவிப்புகளிலும் பிழையற்ற தமிழ் நடமாட வேண்டும். செய்தி
அறிவிப்பவர்கள், திரைப்படக் காட்சிச் சாலைகளில் ‘மூன்று
காட்சிகள் காண்பிக்கப்படும்’ என்று எழுதாமல், தவறாகக் ‘காக்ஷிகள்’
என்றே இன்றும் எழுதிக் காட்டுகிறார்கள். திரைப்படக் காட்சிச்
சாலை உரிமையாளர்கள் இந்தப் பிழையை நீக்க வேண்டும்.
நண்பர்கள், அவர்களுக்கு இப் பிழையை எடுத்துக்காட்டி அதனை நீக்க
முயற்சி செய்ய வேண்டும். ‘காட்சி’ என்பதுதான் சரியான சொல்.
அன்பர்கள் இப்பிழையை நீக்குமாறு முனைய வேண்டும். படமுதலாளிகள்,
சுவர் விளம்பரத்தில் பிழையான தமிழ் வாராத முறையில்
தமிழ்மொழியில் தேர்ச்சியுள்ளவர்களைக் கொண்டு அவற்றை
மேற்பார்க்குமாறு செய்யவேண்டும்.
இங்கு மக்கள் பெருவாரியாகச் செய்யும் பிழைகளுள் சில
தொகுத்துத் தரப்படுகின்றன. சுவற்றில் என்று எழுதும் பிழையை
எங்கும் காண்கிறோம். சுவர் என்பதுதான் சரியான சொல். சுவல்
என்பதற்குத் தோள் என்பது பொருள். தோள் போலக் கூரைகளைத்
தாங்கி நிற்பதற்குச் சுவல் என்னும் பெயர் வந்தது. சுவல்
என்பது
|