சுவர் என ஈற்றுப்போலி பெற்றது. மேற்கூரை என்பதில் உள்ள
கூரை என்னும் சொல் காரணப் பெயர். கூர்கள் சேர்வது கூரை
எனப்படும். கைத்தறித்துணி என்னும் தொடரிலுள்ள தறி என்பதற்குக்
கம்பு என்பது பொருள். கட்டுத் தறி என்பது இப்பொருளில் வருதல்
காணலாம். பகுதி பகுதியாக அறுக்கப்படுவது அறை. தரையை மருவி
நிற்பது மரம். குளிப்பதற்கு உரியது குளம். ஏருக்குப்
பயன்படுவது ஏரி.
இவ்வாறு காரணத்தை நோக்கினாலும் பகுதியைப்
பார்த்தாலும்
எழுத்துப் பிழைகளை நீக்கி விடலாம்.
சொல்லுக்கு முதலில் வாரா எழுத்துகள்
சொல்லுக்கு முதலில் யி, யீ, யெ, யே, யை, யொ, வு, வூ, வொ,
வோ என்னும் எழுத்துகளும், ணகர ழகர ளகர றகர னகர வரிசை
எழுத்துகளும் வாரா. ‘யிலை’ என்றும் ‘றாமசாமி’ என்றும் எழுதுவது
தவறு. ‘இலை’ என்றும், ‘இராமசாமி’ என்னும் எழுதவேண்டும்.
மற்றவற்றிற்கு எடுத்துக்காட்டுகள் தேவையில்லை ட, ல, ர என்னும்
எழுத்துக்கள் இக்காலத்தில் சொல்லுக்கு முதலில் வரலாம். ‘டில்லி’
என்பதை ‘இடில்லி’ என்றோ, ‘லங்காஷயர்’ என்பதை ‘இலங்காஷயர்’
என்றோ, ‘ரப்பர்’ என்பதை ‘இரப்பர்’ என்றோ, ‘டயர்துரை’
என்பதை, ‘இடயர்துரை’ என்றோ இந்நாளில் எழுத
வேண்டுவதில்லை;
அப்படியெழுதினால் பொருளே மாறுபாடும்.
க், ச், ட், த், ப், ற் என்னும் வல்லினமெய்கள் சொல்லின்
கடைசியில் வருவதை இக்காலத்தில் ஏற்றுக் கொள்ள
வேண்டும்.
‘குக்’ என்பவர் ஆஸ்டிரேலியாவைக்
கண்டுபிடித்தார்.
‘ஜேம்ஸ் வாட்’ நீராவியைப்
பயன்படுத்தக் கண்டறிந்தார்.
‘குக்கு’ என்றோ ‘வாட்டு’
என்றோ எழுதாமல் பிறமொழிப்
பெயர்கள் வல்லின் மெய்யில் முடிவதை நாம் அப்படியே
எழுதலாம்.
‘ற்’ என்பது சொல்லுக்கு இறுதியில் நில்லாது
என்று
|