தெரிந்து கொள்வது போதுமானது. ‘கதிர்’ என்று எழுதவேண்டுமே
அன்றிக் ‘கதிற்’ என்று எழுதலாகாது. ‘நெல்+கதிர்’ என்னும் இரண்டு
சொற்கள் சேரும்போது ‘நெற்கதிர்’ என்றாகும். இங்கே ‘ல்’ என்னும்
மெய் ‘க’ என்னும் எழுத்தை நோக்கி ‘ற்’ என்னும் எழுத்தாகத்
திரிந்தது.
‘ற்’, ‘ட்’ என்னும் எழுத்துகளுக்குப் பக்கத்தில் எந்த மெய்யும்
வாராது. ‘அதற்க்கு’, என்பது பிழை. ‘நடப்பு’ என்பது தவறு. ‘அதற்கு’,
‘நட்பு’ என்று எழுதுக. அங்ஙனமே முயற்சி, பயிற்சி என்பனவும்
வரவேண்டும்.
‘ட’ முன் ‘ண்’ வரும்; ‘ன்’ வாராது.
‘கண்ட’, ‘வண்டி’, ‘தண்டு’.
‘த’ என்னும் எழுத்துக்கு முன் ‘ந்’ வரும்;
‘ன்’ வாராது.
எந்த, சந்தி, முந்து.
‘ற’ என்னும் எழுத்துக்கு முன்னே ‘ன்’ வரும்;
‘ண்’ வாராது.
என்ற, நின்றார், கன்று.
மேலே குறிப்பிட்ட விதிகளை உள்ளத்தில் அமைத்துக்
கொண்டால்
பல தவறுகளை நீக்கலாம். எண்ணெய், வெண்ணெய், வரவு,
செலவு, பிராமணர்கள் என்பனவற்றை இப்படித்தான் எழுத வேண்டும்
என்பதை மறத்தலாகாது.
சொற்பிழைகள்
சொற்பிழைகளுள் எடுத்துக் காட்டத் தக்கவை பல
இருப்பினும், ‘அருகாமை’, ‘முயற்சித்தான்’ என்னும்
சொற்பிழைகளைச்
சிறப்பாகக் குறிப்பிடலாம்.
பிழை
அருகாமை -
முயற்சித்தான் - |
திருத்தம்
அருகில்
முயன்றான் |
|