பக்கம் எண் :

முடிவுரை 471

வாக்கியத்தில் அஃறிணையில் ஒருமை பன்மைத் தவறுகள்
செய்யப்படுகின்றன. அவற்றை நீக்க வேண்டும். சில பிழைகளும்
திருத்தங்களும் கீழே தரப்படுகின்றன.

வாக்கியத்தில் தோன்றும் பிழைகள்

பிழை
ஆண்டுகள் சென்றது
வண்டிகள் ஒடாது
வருவதும் போவதும் கிடையாது
அது நம்மிடம் உள
அவை இங்கே உனது
இது எல்லாம்
மக்கள் கிடையாது
ஒவ்வொரு சொற்களும்
நாயோ அல்லது
பூனையோ வந்தது.
இரண்டாவது அல்லது
மூன்றாவது கொடு
மதுரை என்ற நகரம்
திருத்தம்
ஆண்டுகள் சென்றன.
வண்டிகள் ஓடா.
வருவதும் போவதும் கிடையா.
அது நம்மிடம் உளது.
அவை இங்கே உள
இவை எல்லாம்.
மக்கள் இல்லை.
ஒவ்வொரு சொல்லும்.
நாயோ பூனையோ வந்தது
இரண்டாவது
மூன்றாவது கொடு.
மதுரை என்னும் நகரம்.

வலி மிகுதலில் பிழைகள்

அங்கு, இங்கு, எங்கு என்னும் சொற்களுக்குப் பின் வல்லெழுத்து
மிக வேண்டும்.

அங்கு + போனேன் =
இங்கு + கண்டார் =
எங்கு + சென்றாய் =
அங்குப்போனேன்.
இங்குக்கண்டார்.
எங்குச் சென்றாய்?