பக்கம் எண் :

472நல்ல தமிழ் எழுத வேண்டுமா?


பெயரெச்சங்களின் பின் வல்லெழுத்து மிகக் கூடாது.

பிழை
இன்றையத் தேவை
முக்கியமானத் தகவல்
சிற்றுண்டி சாலை -
திருத்தம்
இன்றைய தேவை.
முக்கியமான தகவல்
சிற்றுண்டிச் சாலை.

என்றே வல்லெழுத்து மிகுந்த வரவேண்டும்.

ஒரு வாக்கியம் ஒரே கருத்துடையதாக இருக்க வேண்டும்.

ஒரு பத்தியில் (Paragraph) ஒரே கருத்து இருக்க வேண்டும்
என்றும், அக் கருத்தைப் பல வாக்கியங்களால் விளக்கலாம் என்றும்
அறிந்து கொள்வது போதுமானது.

கட்டுரை

கட்டுரை எழுதும் போது முன்னுரை, பொருள், முடிவுரை என்று
பாகுபாடு செய்து, பொருளை மிகைப்படுத்தாமலும் குறைத்துக்
கூறாமலும் வழுவின்றி இனிய தொடக்கமும் அழகிய முடிவும்
அமைத்து எழுதுதல் வேண்டும். கட்டுரை எழுதுவோர் கூடிய மட்டும்
பிறமொழிச் சொற்களை விலக்கி இன்றியமையாத இடத்தில் மட்டும்
பிற மொழிச் சொற்களைப் பயன்படுத்தும் வழக்கத்தை
மேற்கொள்ளுதல் நலமாகும். மொழி நடை, கொச்சையாக இல்லாது
கற்பார் உள்ளம் கவரும் முறையில் எளிய தமிழில் நல்ல முறையில்
இருத்தல் மிக மிக விரும்பத் தக்கது. கட்டுரையில் பெரிய வாக்கியங்களும்
சிறிய வாக்கியங்களும் கலந்து வர வேண்டும்.

வார மாத வெளியீடுகளுக்குக் கட்டுரை, கதை, கடிதம் எழுதுவோர்
மிக நீளமாக எழுதுதல் கூடாது. நீண்ட முன்னுரையின்றிச் சொற்பொழிவு
செய்யாமல் எழுதும் பொருளில் நுழைந்து விடுவதே நல்லது. தலைப்பு
உள்ளம் கவரும் வகையில் அமைதல் இன்றியமையாதது.