பக்கம் எண் :

ஐயமுறும் சொற்களின் வரிசை 488

தேங்காய் மூடி (முடி-தவறு)
தேகம் (திரேகம் - தவறு)
தேமல் நன்னூற்றுறைகள்
தேர்தல்
(Election)
தேர்வு
(Examination)
தேர்ச்சி பெற்றான்
தேர்ந்தெடுத்தார்கள்
தேநீர்
(Tea)
தேனீர் (தேன் போன்ற நீர்)
தேறினான் (தேர்வில்)
தேவநாதன்
தேறி (மணல் தேறி)
தொகை
தொடக்கம் (துவக்கம், துடக்கம்
-தவறு)
‘தொடக்கம் குறுகும்
பெயர்நிலைக் கிளிவியும்’-
தொல். எழுத்து 8:25,
‘தொடங்குங்கால் துன்பமாய்’
-நீதிநெறி விளக்கம் செய்.3)
தொடை (துடை - தவறு)
தொலைவு
தொலைக்காட்சி
தொலைபேசி
தொழிற்றுறை
தொறும் (நாள்தொறும்)
தோறும் (‘அறிதோறும்
அறியாமை’-குறள்’1110)
நடைபெறும்
நட்பு
நந்நான்கு (நான்கு நான்கு)
நந்நாடு (நம்+நாடு)
நன்னாடு (நல்+நாடு)
நற்றாள் (நல்+தாள்)
நன்னோக்கம்
நன்செய்நிலம்
நன்னெறி
நறுமணம்
நாகரிகம் (நாகரீகம் - தவறு)
நாட்டுப்புறம்
நாராயணன்
நாழிகை
நாற்பது
நாற்பதினாயிரம்
நானூறு (400)
நிமிர்த்தினான் (நிமித்தினான் -தவறு)
நிரம்ப (ரொம்ப - தவறு)
நிரப்பு (ரொப்பு - தவறு)
நிலை நிறுத்த வேண்டும்
நிற்கிறான
நிறுவனம்
நிறுவினார்
நிறுத்தினான்
நிறை
நிறைவேறிற்று
நீர்த்த (நீர் கலந்த)
நீத்த (நீக்கிவிட்ட)
நீராக்கி (நீர்த்தன்மையாக்கி)
நீறாக்கி (தூள் சுண்ணாம்பாக்கி)
நீர்மோர்
நீளம் (நிகளம் - தவறு)
நூல்கள்