|
முத்தம்மாளோ மதுரையாள் - மதுரையாள் என்பது குறிப்பு
வினைமுற்று இவன் இரட்டை மண்டையன் - மண்டையன் என்பது
குறிப்பு வினைமுற்று.
‘நீ சொன்னது உண்டு; செய்தது வேறு; முடிவில் நடந்தது
ஒன்றும் இல்லை’. இங்கு வந்துள்ள உண்டு, வேறு, இல்லை ஆகிய
மூன்றும் குறிப்பு வினை முற்றுகள்.
இன்மை என்னும் பண்படியாகப் பிறந்த குறிப்பு வினைமுற்று
இல்லை என்பது.
வேற்றுமை என்னும் பண்படியாகப் பிறந்தது வேறு என்னும்
குறிப்பு வினைமுற்று.
உண்மை என்னும் பண்படியாகப் பிறந்தது உண்டு என்னும்
குறிப்பு வினைமுற்று.
இந்த வேறு, இல்லை, உண்டு என்னும் மூன்று குறிப்பு
வினைமுற்றுகளும், ஐம்பால்களுக்கும் மூன்று இடங்களுக்கும்
பொதுவாக வரும்.
|
ஐம்பால் : |
அவன் வேறு; அவள் வேறு; அவர்
வேறு;
அது வேறு; அவை வேறு; |
|
மூவிடங்கள் : |
நீ வேறு; நீ்ங்கள் வேறு; நான் வேறு; நாங்கள்
வேறு; நம்பி வேறு; நங்கை வேறு. |
இப்படியே இல்லை, உண்டு என்பவற்றிற்கும் கொள்க.
சுருங்கச் சொன்னால் வெளிப்படையாகக் காலம் காட்டும்
வினையைத் தெரிநிலை என்றும் குறிப்பாகக் காலம் காட்டுவதைக்
குறிப்பு என்றும் கூறலாம்.
|