|
செய்யன்மின் - |
எதிர்மறைப் பன்மை வினைமுற்று. |
வியங்கோள் வினைமுற்று
(Optative Verb)
வியங்கோள் வினைமுற்று மரியாதையாய்க் கட்டளையிடவும்,
வாழ்த்தவும், சபிக்கவும், வேண்டிக் கொள்ளவும் பயன்படும்; இருதிணை
ஐம்பால் மூவிடங்களுக்குப் பொதுவாக வரும். இதன் விகுதிகள் க, ய,
அல், இயர், தல், இ, உம் என்பனவாகும்.
க -
ய -
அல் -
இயர் -
தல் -
இ -
உம் -
தமிழ்நாடு வாழ்க -
அவன் கெட்டொழிக -
நீங்கள் எழுந்தருள்க -
|
தமிழ் வாழ்க.
நீ வாழிய.
நன்மை செயல்.
நீ வாழியர்.
மாசிலனாதல்.
போற்றி, வாழி.
எழுந்தருள வேண்டும்.
- நீங்கள் வந்து சேரவும்.
வாழ்த்துதல்.
சபித்தல்.
வேண்டிக் கோடல். |
வியங்கோள் வினைமுற்று இருதிணைக்கும் மூவிடத்திற்கும்
பொதுவாய் வரும்.
அரசனே வாழி! - உயர்திணை.
அன்னமே வாழி! - அஃறிணை.
நான் செல்க.
நாம் செல்க.
நீ் செல்க.
நீங்கள் செல்க. |
தன்மை
முன்னிலை |
அவன் செல்க.
அவள் செல்க.
அவர் செல்க.
அது செல்க.
அவை செல்க. |
படர்க்கை |
முற்றெச்சம்
வினைமுற்று வினையெச்சப் பொருளில் வரும்போது முற்றெச்சம்
என்று சொல்லப்படும். முற்றெச்சம், முற்றுப்பேலக் காணப்படும்;
ஆனால், வினையெச்சப் பொருளைக் கொடுக்கும்.
|