பக்கம் எண் :

10தமிழர் வரலாறு-2

பக்கு(பை) - bag,பரந்த - broad, கொல் - kill,பரத்து - spread.

அவ் வகரமுதலியில், சில ஆங்கிலச்சொற்கட்கு மூலந் தவறாகக் குறிக்கப்பட்டுள்ளது.

எ-டு: "bury............ burg-st.of Gmc bergan shelter, protect." இதுபொருந்தப் புகலல் என்னும் உத்திபற்றியது. புதை-bury,புதையல்-burial. ஒ.நோ:விதை-விரை.

"lo, int.............. combining OE. la int. ME. lo =loke, Look." இதுவும் பொருந்தப்புகலலே.

இதா-la,இதோ-lo. ஒ.நோ: மது-L.mel.

ஆரிய மொழிகள் ஐரோப்பாவின்மேற்கினின்று கிழக்காகத் திரிந்த படிமுறைத்திரிபைக் காட்டும்.

சொற்பட்டி

தமிழ் 

தியூத்தானியம்  இலத்தீன் கிரேக்கம்  கீழையாரியம்

அல் 

அன்  -   அன் ந(ந்+அ)

(எதிர்மறை முன்னொட்டு)

இதோள் 
(இங்கு)

ஹிதர் கித்ர  அத்ர

இரு 

இஸ்  எஸ்  எஸ்  அஸ்

இரும்பு 

ஐரன் 
அயெண்
ஈரிஸ்  அயஸ்

இலக்கம் 
(வெளிச்சம்)

லைற்(று)  லுக்ஸ்  லியூக்கோஸ் ருச்

உகை-அகை 
(செலுத்து)

அக  அகோ(g)  அகோ(g)  அஜ்

கணு 
(முட்டு)

க்னீ  கெனு(g)  கொனு(g)  ஜானு

கத்து 
(வெட்டு)

கட்  க்ருத்

காண் 

கான்-  க்னோ(g)  க்னோ(g)  ஜ்ஞா

(அறி)  

க்னா-க்னோ-
னோ
-னோ 

கிழம் 

-(கம்)  கெரொன்(g)  ஜரா

குந்து 

ஸ்குவாத்  ஸெத்(d)  ஸத்(d)

கும்(கூடு) 

கும்  ஸிம்  ஸம்

துளை 
(வாயில்)

தோர்  துர  த்வார்(d)

துருத்து 

த்ரஸ்ற்(று)  த்ருடொ  தூத்(d)

நாவி, நாவிஸ் 

நௌஸ் நௌ  நாவாய்