பக்கம் எண் :

தமிழர் வரலாறு-2101

"பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர்." 

(குறள்.1034)

"இரவார் இரப்பார்க்கொன் றீவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்." 

(குறள்.1035)

"இல்வாழ்வான் என்பான் இயல்புடையமூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை." 

(குறள்.41)

"துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும்இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை." 

(குறள்.42)

வெளிநாட்டு அரும்பொருள்களையெல்லாம் கொண்டுவந்து மக்கள் வாழ்க்கையைவளம்படுத்தியும், அரசனுக் கவ்வப்போது பணமுதவியும், நாட்டிற்கு நன்மை செய்த வாணிகன்,உழவனுக்கடுத்த படியாகப் போற்றப்பட்டான்.

கள்வராலும் கொள்ளைக்காரராலும்பகைவராலும் அதிகாரி களாலும் கடுவிலங்குகளாலும்,உயிருக்கும் பொருளுக்கும் கேடு வராமற் காக்கும்அரசன், பணிவகையில் வணிகனுக்கு அடுத்த படியாகவும்,அதிகார வகையிற் கண்கண்ட கடவுளாகவும்கருதப்பட்டான்.

ஆசிரியனாகவும் அமைச்சனாகவும்தூதனாகவும் பணிபுரி பவனும், ஆக்கவழிப்பாற்றலுள்ளவனுமான அந்தணன், இறைவனுக் கடுத்தபடிதெய்வத்தன்மையுள்ளவனாகக் கருதப்பட்டான்.

இங்ஙனம் உழவு, வாணிகம், காவல், கல்விஎன்னும் நாற் றொழிலே தலைமையாகக்கொள்ளப்பட்டு, எல்லாக் கைத்தொழில் களும்உழவுள் அடக்கப்பட்டன.

பொருளிலக்கண நூலார், அகப்பொருளின்பத்தைச் சிறப்பித்தற் பொருட்டுத்தலைமக்களையே கிளவித்தலைவராகக் கொண்டதனால்,வேந்தர்க் குற்றுழிப் பிரியும் (உழுவித்துண்ணும்வேளாளர் தலைவனாகிய) வேளையும், பொருள்வயிற்பிரியும் இருவகை வணிகர் தலைவரையும், போருக்குப்பிரியும் இருவகை யரசரையும், தூதிற்குப்பிரியும்(கீழ்நிலை அந்தணனாகிய தமிழப்)பார்ப்பனத் தலைவனையும் காதலராகக் குறித்தனர்.வேளாளர் வணிகர் அரசர் அந்தணர் என்பதேவரலாற்று முறையாயினும், அந்தணர்க்கும்அரசர்க்கும் சிறப்புக் கொடுத்தற்பொருட்டுஅந்தணர் அரசர் வணிகர் வேளாளர் என எதிர்முறையிற் கூறினர்.

இந் நாற்பாற் பகுப்பையே, பிராமணர்சத்திரியர் வைசியர் சூத்திரர் எனத்திரித்தனர் ஆரியப் பூசாரியர்.