தமிழம் | ஆரியம் |
தமிழப் பாகுபாடு தொழில் ஆரியப்பாகுபாடு நிறத்தையும் ஒன்றையே அடிப்படையாகக் பிறப்பையுமேஅடிப்படையாகக் | கொண்டது. கொண்டது. வரணம் நிறம்,சாதி பிறப்பு. ஜன்-ஜா-ஜாதி = பிறப்பு, பிறவிக் குலம். |
அந்தணர் என்று சிறப்பித்துச்சொல்லப்படுவோர், அந்தண்மை (அழகிய குளிர்ந்த அருள்) பூண்டதுறவியர். அந்தண்மை பூண்ட இல்லறத்தாரானபார்ப்பாரும் அந்தணர் என்னும் பெயருக் குரியர். இவ்விரு வகுப்பிற்கும் இனகுலமத இட வரையறையில்லை. | ஆரியப்பூசாரியாரே பிராமணர்,துறவுபிராமணனுக்கே உண்டு. ஆதலால்,அவனே வீடுபேறடைய முடியும். |
அரசர் என்பார் ஆள்குடியினர். | சத்திரியர் என்பார் ஆள்குடியினரும போர்மறக் குலத்தாரும் ஆவர். |
வணிகர் என்பார் பண்டமாற்றுஅல்லது வாணிகம் ஒன்றே செய்பவர். | வைசியர்என்பார், வாணிகம் வேளாண்மை ஆ வளர்ப்பு ஆகிய முத்தொழில் செய்பவர். |
வேளாளர் என்பார் பயிர்த்தொழில்ஒன்றே செய்பவர். | சூத்திரர் என்பார் பல்வேறு கைத்தொழிலும்கூலிவேலையும் அடிமைத் தொண்டும் செய்பவர். |
நால்வகுப்பாருள்ளும் வேளாளனேஉயர்ந்தவன். அவன் உழவுத் தொழிலும் வேளாண்மையுஞ்செய்வதனாலேயே, உலகம் நடைபெற்று வருகின்றது. | நால்வரணத்தாருள்ளும் பிராமணனேஉயர்ந்தவன். அவன் வேள்விவளர்ப்பதனாலேயே, உலகம்நடைபெற்று வருகின்றது. உழும்போதுபுழுப்பூச்சிகள் கொல்லப்படுவதால், உழவுத்தொழில் மிக இழிவானது. |
கல்வி எல்லார்க்கும் பொது.எவ்வகுப்பிலும் எக்குடும்பத்திலும் அறிஞன் தோன்றலாம். | கல்விபிராமணனுக்கே உரியது. மற்றெல்லாரும் மற்றத் தொழில்களேசெய்தல் வேண்டும். |
திறமையும் விருப்பமும்பற்றிவன் எத்தொழிலையுஞ் செய்யலாம்; எச்சமையத்திலும்தொழில் மாறவுஞ் செய்யலாம். | ஒருநால்வரணமும் இறைவனாற் படைக்கப்பட்டவை. ஒவ்வொருவனும் தன்வரணத்திற்குரிய தொழிலையே செய்தல் வேண்டும். |