கைக்கோளன் | பொன்னம்பலத்தான் | பேரிச்செட்டி | வீரமுட்டி |
குறவன் தொழில் - வேட்டையாடல், கூடைமுறம்முடைதல், உப்பு விற்றல், மருத்துவஞ் செய்தல்,திருடல். பெண்டிர் தொழில் - குறிசொல்லுதல்,பச்சை குத்துதல். பிரிவு - ஊர்க்குறவன், மலங்குறவன்,நாடோடி. ஊர்க்குறவன் பிரிவு - தப்பை(மூங்கில்வேலை), கொங்கன், உப்பு. பல அகமணப் பிரிவுகள். மலங்குறவன் பிரிவு - குன்றக் குறவன்,பூங்குறவன் (வேலன்), காக்கைக் குறவன் (கக்கலன்),பாண்டிக் குறவன் (நாஞ்சிற் குறவன்). நாடோடிகள்-காளிக்கோட்டம்வரைபல்வேறு நாடு சென்று, அவ்வந் நாட்டு மொழி பேசி, வெவ்வேறுபெயர் கொண்டு, வேட்டை மருத்துவம் களவு ஆகிய தொழில்செய்பவர். குருவிக்காரன் அல்லது நரிக்குறவன்தமிழ் மராட்டி இந்துத்தானி ஆகிய மும்மொழிபேசுபவன். தலைவன் பட்டம்-பெரிய மனிதன்(மனுசன்), ஊராளி, பணிக்கன். குலப்பட்டம் - சேர்வைகாரன், பிள்ளை,கவுண்டன் முதலியன. குறும்பன் தொழில் - குறும்பாடு மேய்ப்பு,முரட்டுக் கம்பளி நெசவு, தேனெடுப்பு முதலியன. பிரிவு - காட்டுக் குறும்பு x நாட்டுக்குறும்பு. தேன்(ஜேன்) குறும்பு, பன்றிக் குறும்புமுதலியனஉட்பிரிவுகள். பட்டம் - மூப்பன். கைக்கோளன் பெயர் - கைக்கோளன் (தமிழ்நாட்டின்நடுவும் தென்பாகமும்). செங்குந்தன் (தமிழ்நாட்டின்வடபாகம்). கையிற் கோல் (நெசவுக் குழல்)கொண்டவன் கைக்கோளன்.
|