பக்கம் எண் :

116தமிழர் வரலாறு-2

நாட்டுப் பகுதிகளைஆண்டிருக்கலாம். "நாற்படை வன்னியர்"(கல்லா.37:15) என்னுந் தொடரில், வன்னியர் என்பதுகுறுநில மன்னரையே குறிக்கின்றது. கடம்பர் என்னும்சொல்லைப்போல் வன்னியர் என்பதையுங்கொண்டால். அது தென்சொல்லேயாகும்.கிறித்துவிற்குப் பிற்பட்ட காலத்திலேயே,வடசொல் தமிழரசர் பெயர் வழக்கிற் புகுந்தது;குலப் பிரிவும் தலையெடுத்தது.

இனி, வன்னியன் என்னும் சொல்,கள்ளர் வலையர் முதலிய சில குலத்தாரின் பட்டப்பெயராக வழங்குவதையும் அறிதல் வேண்டும்.சத்திரியன் (க்ஷத்ரிய) என்னும் வடசொல், வல்லபம்என்னும் பொருளதே. ஆதலால், வன்னியர்குல வல்லபர்என்று வழங்குவதே. இக்காலத்திற் கேற்றதும்மோனையழகு அமைந்ததுமாகும்.

பறம்பன்

இடம் - திருநெல்வேலி, மதுரை,புதுக்கோட்டை.

தொழில் - தோல் வேலையும்சுண்ணாம்புக்கல் சுடுதலும், செருப்புத் தைக்கும்தமிழக் குலத்தான் இவனே. செம்மான் (சருமன்) என்பதுவடசொல்.

பறையன்

பெயர் - பறையன், புலையன்.

தொழில் - பறையடித்தல், பறையறைந்துவிளம்பரஞ் செய்தல், முரட்டுத் துணி நெய்தல்,கூலிவேலை செய்தல், பிணஞ்சுடுதல்.

பிரிவு - பல புறமணப் பிரிவுகள்.

பட்டம் - சாம்பான், மூப்பன், பிள்ளை.

பாணன்

பெயர் விளக்கம் - பண் = பாட்டு, இசை.பண் - பாண் - பாணன் = பாடகன், இசைத் தொழிலாளன்.

தொழில் - பண்டு : வாய்ப்பாட்டு,குழலிசை, யாழிசை.

இன்று : தையலும் கூத்தும் (தமிழ்நாடு).

கூடை கட்டல், மீன் பிடித்தல்,பேயோட்டல் (மலையாள நாடு).பட்டம் - பணிக்கன்.

மறவன்

இடம் - பாண்டிநாடு.

தொழில் - பண்டு : போர்த் தொழில்.

இன்று : காவல், பயிர்த்தொழில்,கல்வித்தொழில்.