பக்கம் எண் :

தமிழர் வரலாறு-2129

டிருக்கின்றன. ஒருவர் வசிக்குந் தெருவில்மற்றொருவர் வசிப்ப தில்லை. சுபாசுபப்பிரயோசனங்களிலும் ஒருவரிருக்கும் வீதி வழியாகமற்றொருவர் ஊர்வலம் வருவதில்லை. பிரேதங்கொண்டு போவ தில்லை. கருமாதியிலுமப்படியே.இருவருக்கும் பொது வாயுள்ள வீதியில் போவதற்குத்தடையிராது. சுவாமிகளுக்கு உற்சவாதிகளும்அந்தந்தக் கட்சிகளிலுள்ள வீதிகளிலேதான்நடத்துவார்கள்" என்று கனகசபைப் பிள்ளை 1901ஆம்ஆண்டில் எழுதியுள்ளர். (வருண சிந்தாமணி, பக். 502-3).

கல்வியிழப்பு: வேதம் முதலியபன்னூலொடு பல்கலையும், பிராமணர்க்கு ஊணுடையுடன்வேத்தியற் செலவிற் கற்பிக்கப் பட்டன.தமிழர்க்கு மூவேந்தரும் ஒரு கல்விச்சாலையும்ஏற்படுத்த வில்லை.

நடுநிலை நயன்மை யிழப்பு: மூன்றாங்குலோத்துங்கச் சோழன் ஒரு பிராமணக்குற்றவாளிக்குக் கொலைத்தண்டனை யிட்டதனால்,அப் பிராமணன் ஆவி அவனை நெடுநாள்அலைக்கழித்ததென்று ஒரு கதை கட்டப்பட்டுள்ளது.மலையாள நாட்டிற் பிராமணனுக்குக் கொலைத் தண்டனையில்லையென்று சட்டமிருந்தது.

முன்னேற்றத் தடை: தமிழன் தன்முயற்சியினால் இம்மையில் தன் நிலைமையையுயர்த்தினாலும், தன் குலத்தை மறுமையில்தான்மாற்ற முடியும் என்றும், சூத்திரன் பல பிறப்பில்தவஞ்செய்து வைசியனாகலா மென்றும். இங்ஙனமேவைசிய நிலையிலும் சத்திரிய நிலையிலும் முயன்றபின்னரே இறுதியிற் பிராமணனாக முடியு மென்றும், ஒருதிரிவாக்கக் (Evolution)கொள்கை புகுத்தப்பட்டது. இதை நம்பி ஏராளமானபொருளை வேள்வியிற் செலவிட்ட பேதையர்எத்தனையோ பேர்! இனி, ஆறு தாண்டலையும் கடல்கடத்தலையும் தடுத்தது அறிவு வளர்ச்சித்தடையாகும்.

(2) பண்பாட்டுத் துறை

மறமிழப்பு:

"கொல்லேற்றுக் கோடஞ்சு வானை
மறுமையும் புல்லாளே ஆய மகள்." 

(கலித்.103)

என்று புகழப்பட்ட ஆயர் குலம், இன்றுபெண்டிர் மட்டுமன்றி ஆட வரும் ஆட்டுக்குட்டிகள்என்னுமாறு, அடங்கியொடுங்கி யமைந்தது. அன்றுகூற்றுவனும் நடுங்குமாறு கோவர் (ஆயர்) நடத்தி வந்தகொல்லேறு கோடல்விழா இன்று மறவராற்சல்லிக்கட்டு என்னும் பெயரில் காட்சியளவாகநடைபெற்று வருகின்றது. பொது வர் கல்லூரி அல்லதுகோவர் கல்லூரி என்று அழகிய பெயரிடவும்துணிவின்றி, யாதவர் கல்லூரி என்று ஒருவடநாட்டரசன் பெயர் பற்றிய வடசொல்லைஆண்டுள்ளனர்.