பக்கம் எண் :

தமிழர் வரலாறு-2151

தாழ்வு சமற்கிருத வுயர்வு என்னும்நிலைமையுள்ளது. தாக்கு வோனைத் தாக்காதுதற்காப்போன் விடுதலை பெற முடியாது. பிராமணர்இக்காலத்தில் தம்மை நிலத்தேவர் என்று சொல்லமுடியாதாகையால், சமற்கிருதம் தேவமொழியென்றுசொல்லித் தம் மேம்பாட்டை நிலைநிறுத்தமுயல்கின்றனர். கோவில் வழிபாடும் இருவகைச்சடங்குகளும் தமிழில் நடைபெற்றாலொழிய, தமிழ்விடுதலை யடைந்து தன் பழம்பெருமையை மீளப்பெறமுடியாது. தமிழுயர்ந்தால்தான் தமிழன்உயர்வான்.

இன்று பிராமணியத்தை நடத்தி வருபவர்தமிழரே

பண்டை நாளில், பிராமணர் தம்வெண்ணிறத்தாலும் வேதமந்திர வெடிப்பொலியாலும்வேறு வழியாலும் மூவேந்தரையும் வயப்படுத்தி, அவர்வாயிலாகத் தம் கொள்கையைப் பொதுமக்களி டம்வலிந்து புகுத்தினர். இக்காலத்தில், சில கட்சித்தலைவரையும் சில செல்வரையும் வையாபுரிகளையும்துணைக்கொண்டு, தம் கருமத்தை முடிக்கப்பார்க்கின்றனர்.

ஆயினும், அவருள்ளும் ஒள்ளிய மனமும்தெள்ளிய அறிவு முடையார் உளர். தமிழரெல்லாரும்நல்லவ ரல்லர்; பிராமண ரெல்லாரும் தீயவரல்லர்.திருவதங்கோட்டில் (Travancore)தீண்டாதார்க்கு முதன் முதல் திருக்கோவில்களைத்திறந்துவிட்டவர் (C.P.)இராமசாமி ஐயரே. வரலாற்று நூல் தமிழ்த்தொண்டருள் தலைசிறந்த மூவர் பிராமணரே.

சின்னஞ்சிறு தொகையினரும்போர்மறமும் வல்லுடம்பும் இல்லாதவருமானபிராமணர், காட்டிக் கொடுக்கும் போலித் தமிழருதவியின்றித் தமிழுக்கும் தமிழர்க்கும் மாறாகஎதுவுஞ் செய்ய முடியாது.

தி.மு.க. அரசிற்குத் தமிழே வல்லரண்

இந்தியை யெதிர்த்துத்தமிழ்ப்பற்றுக் காட்டியதனாலேயே, தி.மு.க.பேராயத்தை வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்றியது.தமிழ் திரவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்குமூலமுமாகும் என்னும் உண்மையை நாட்டின், இம்மண்ணுலகுள்ள அளவும் தி.மு.க. அரசை எவரும் அசைக்கமுடியாது. இந்தி தமிழ்நாட்டினின்று தானேநீங்கிவிடும். திருக்கோவில்களில் தமிழிலேயேவழிபாடு நடைபெறும். பிற பைதிரங்களை(பிரதேசங்களை) விடத் தமிழ்நாடு மிகுந்த வுரிமைகளை நடுவணரசினின்று பெறும்.


கல்வித் திணைக்களத்தின் கடுங்குறைகள்

தி.மு.க. ஆட்சியில், கல்வித்திணைக்களம் (department)தவிர மற் றெல்லாத் திணைக்களங்களும் ஏறத்தாழச்சீராக நடைபெற்று வருகின்றன.