பக்கம் எண் :

28தமிழர் வரலாறு-2

வண்ணமும்கணக்கற்ற திருப்புகழ் வண்ணமும்), பாட்டுவகை(கணக்கற்ற வண்ண மெட்டுகள்).

வண்ணம் என்னும் சொல்லிற்குரியபொருள்கள், பெரும் பாலும், வரி, வரணம் என்னும்சொற்கட்கு முண்டு.

அவ்வண்ணம் இவ்வண்ணம் என்பன, அப்படிஇப்படி என்று பொருள்பட்டுப் பொதுவான வகையைக்குறிப்பன. இன்ன வண்ணம் - இன்னணம்.

வரணி - . வர்ண். வரணனை - .வர்ணனா.

வண்ணம், வரணம் என்னும் இருதென்சொற்களையும் வடசொல்லென மயங்கி, வரணம்என்பதை வருணம் என்றும், வரணி என்பதை வருணிஎன்றும், வரணனை என்பதை வருணனை என்றும், அகரத்தைஉகரமாக மாற்றி எழுதுவதோ டமையாது, வண்ணம், வண்ணிஎன்னும் சொற்களையும் வர்ண, வர்ண் என்னும்வடசொல் வடிவுகளின் திரிபாகக் கொள்வாராயினர்.

நால்வகை வரணப் பகுப்பின் பின்னரே,பேருலக வடிவான 'விராட்' என்னும் பரம்பொருளின்முகத்தினின்று பிராமணனும், தோளினின்று(புயத்தினின்று) சத்திரியனும், தொடையினின்றுவைசியனும், பாதத்தினின்று சூத்திரனும்தோன்றினர் என்னும் 'புருட சூத்தம்' (புருஷ ஸூக்த)இருக்கு வேதம் பத்தாம் மண்டலத்தில்செருகப்பட்டது. பேருலக வடிவான பரம்பொருட்கருத்தும், பிராமணர்க்குத் தமிழரொடு தொடர்புகொண்டபின் தோன்றியதே.

முகம் முதலிய நான்கனுள்ளும், முகமேஉச்சியிலும் ஏனை மூன்றும் ஒன்றனொன்றுதாழ்ந்தும், முறையே மேலிருக்கும் ஒன்றையும்இரண்டையும் மூன்றையும் தாங்கியும் இருப்பது போல்,நால் வரணத்துள்ளும் பிராமணனே தலைமையானவன்என்பதும், ஏனை மூவரும் முறையே ஒருவரினொருவர்தாழ்ந்தவரும் மேலுள்ள ஒருவனையும் இருவரையும்மூவரையும் தாங்க வேண்டியவருமாவர் என்பதும்;நாலுறுப்பும் ஒரே ஆள் வடிவான பேருலக மகன் (விராட்புருஷ) கூறுகளாதலால், நால்வரணமும் இறைவன் படைப்பென்பதும் கருத்தாம்.

இனி, கல்வித் தொழிலுக்கு வாயும்(நாவும்) மூளையும், போர்த்தொழிலுக்குத் தோளும்,இருந்து துலை நிறுத்தற்குத் தொடையும், நடந்துபாடுபடுதற்குப் பாதமும் வேண்டுமென்பதுஉட்கருத்தாம்.

இனி, போருக்கு வேண்டும் தோள்வலிமைமறக்குடியினர்க்கும், வணிகத்திற்கு வேண்டும்பண்டமாற்றுத் திறமை வாணிகக் குடி