பக்கம் எண் :

தமிழர் வரலாறு-229

யினர்க்கும், உழைப்பிற்கு வேண்டும் உடல்வலிமை பாட்டாளி மக்கட்கும் இருப்பதுபோல், கல்விக்கு வேண்டும் நாவன்மையும் மதிநுட்பமும் பிராமணனுக்கே யுண்டென்பதும், ஆதலால், நால் வரணத்தாரும் தத்தமக்குக் குறிக்கப்பட்ட தொழிலையே செய்துவர வேண்டுமென்பதும், நச்சுத்தன்மையான சூழ்ச்சிக் கருத்தாம்.

பிராமணர் பொதுமக்களொடு தொடர்புகொள்ளாது நேரே வேந்தரை யடுத்து, அவர் பழங்குடிப் பேதைமையையும் கொடைமடத்தையும் மதப் பித்தத்தையும், தம் வெண்ணிறத்தையும் வெடிப்பொலி மொழியையும், வரையிறந்து பயன்படுத்திக்கொண்டு, தாம் நிலத்தேவர் என்றும் தம் மொழி தேவமொழி யென்றும், தாம் குறித்த வேள்விகளைச் செய்யின் இம்மையில் மாபெரு வெற்றியும் மறுமையில் விண்ணுலக வேந்தப் பதவியும் பெறலாமென்றும் துணிந்து சொன்னபோது, அறிவியற் கல்வியும் மொழியாராய்ச்சியும் இல்லாத அக்காலத்து அரசர் முற்றும் நம்பி அடிமையராயினர். "மன்னன் எப்படி, மன்னுயிர் அப்படி" ஆதலால், குடிகளும் ஆரியர்க் கடிமையராயினர்.

ஒன்றரை நூற்றாண்டு ஆங்கிலர் ஆட்சியும், இரு நூற்றாண்டு ஆங்கில அறிவியற் கல்வியும், கால் நூற்றாண்டு நயன்மைக் கட்சி முன்னேற்றமும் ஏற்பட்ட பின்னும், மேலையர் திங்களையும் செவ் வாயையும் அடையும்போதும், தமிழின் திரிபான சமற்கிருதத்தைத் தேவமொழி யென்றும், சமற்கிருதச் சொல்லின் ஆற்றல் தமிழ்ச்சொற் கில்லையென்றும், உறழுரையாடுவாராயின், அதைச் செவிமடுத்துத் தமிழரும் ஊமையரும் உணர்ச்சி நரம்பற்றவருமா யிருப்பாராயின், மூவாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட கள்ளங் கரவற்ற வெள்ளந்தி மக்கள் ஆரிய ஏமாற்றிற்கு இணங்கியது வியப்பாகாது.


முத்திருமேனிப் புணர்ப்பு

பிராமணர் தமக்கும் தம் வேதத்திற்கும் தம் வேதமொழிக்கும் எத்துணை யுயர்வைத் தேடிக்கொள்ளினும், மதத்துறையில் மட்டும் தமிழரை வெல்ல முடியவில்லை. ஏனெனில், ஆரிய மதம் வீடுபேற்றுக் கொள்கையும் கடவுளுணர்ச்சியுங் கோவில் வழிபாடு மில்லாது, கீழ்மக்கள் பேய்கட்குப் படைப்பதும் காவு (பலி) கொடுப்பதும் போல், இயற்கையுஞ் செயற்கையுமான பல்வேறு சிறுதெய்வங்கட்கு, விலங்குகளைக் காவிட்டுத் தீயிற் சுட்டெரிக்கும் அல்லது வாட்டித் தின்னும் வேள்விநெறியே.

தமிழரோ, எங்கும் நிறைந்து எல்லாவற்றையும் படைத்துக் காத்தழிக்கும் இறைவனை, சிவன் என்னும் பெயராலும் திருமால் என்னும் பெயராலும் பெரும்பாலும் காய்கனிகளையே படைத்து