முகில் துளி சிந்தியே மக்கட்குக்கீழ்நீரும் மேல்நீரும் ஆற்றுநீரும் கிடைத்தலால்,சிந்து என்னுஞ் சொற்கு நீர் (பிங்.), ஆறு (பிங்.)என்னும் இருபொருளும் ஏற்பட்டன. இனி, சிந்துதல் என்னும்வினைச்சொற்குத் தெளித்தல் என் பதனொடு ஒழுகுதல்என்னும் பொருளுமிருத்தலால், சிந்து என்னுஞ் சொல்ஓர் ஆற்றின் பெயராவதற்கு முற்றும்பொருத்தமானதே. வடமொழியில் இச் சொற்குமூலமில்லை. மானியர் உவில்லியம்சு தம்சமற்கிருத-ஆங்கில அகரமுதலியில், ஒருகால் சித் (sidh)என்பது மூலமா யிருக்கலாம் என்று ஐயுறவாகக்குறிப்பர். அச் சொற்குச் செல்லுதல் (togo) என்னும் பொருளே உள்ளது. மேலும்,இருக்கு வேதத்தில் சிந்தாற்றிற்குச் சரசுவதியென்னும் பெயரே வழங்கப்பட்டிருப்பதாகத்தெரிகின்றது. பிற்காலத்தில் ஆரியர்பிரமவர்த்தம் சென்ற பின்னரே, அந் நிலப்பகுதிக்கு மேலெல்லையாகவும் சட்டிலெசு என்னும்கிளையாற்றிற்குத் துணைக்கிளையாகவும் இருந்தசிற்றாற்றிற்கு, அப் பெயரை இட்டதாகத்தெரிகின்றது. அது இன்று சுர்சூதி (Sursooty)என்று வழங்குகின்றது. பழம்பாரசீகரின் சொராத்திரிய (Zoroastrian)வேதமாகிய செந்துஅவெத்தாவில் (Zend-Avesta),ஹப்த ஹைந்தவ என்பது அகுரமத்தாவினாற்படைக்கப்பட்ட பதினாறு தெய்வங்களுள் ஒன்றாகக்கூறப்பட்டிருப்பதனாலும், ஹாக்வைதி (Haraquaiti)என்பது ஓர் ஆபுக்கானிய ஆறாகக்குறிக்கப்பட்டிருப்பதனாலும், பல தெய்வங்கள்,சிறப்பாக அக்கினி, சொராத்திரியர்க்கும்இருக்கு வேதியர்க்கும் பொதுவாயிருப்பதனாலும்,அவ்விரு வகுப்பாரும் ஒருகாலத்திற்சிந்துவெளியில் ஓரினத்தாரும் ஒரே மதத்தாருமாய்வாழ்ந்திருந்து, பின்னர் முன்னவர் மேற்கும்பின்னவர் கிழக்குமாகப் பிரிந்து போயினர்என்பது உய்த்துணரப்படும். சகரம் அல்லது ஸகரம் பாரசீகர்வாயில் ஹகரமாகத் திரியும். எ-டு: சிந்து (ஸிந்து) - ஹிந்து ஸப்தன் (ஏழு) - ஹிப்தன் அசுரன் (அஸு ர) - அஹுர இம் முறையிலேயே, ஸப்தஸிந்து என்பதுஹப்தஹிந்து என்றும், ஸரஸ்வதி என்பது ஹரக்வைதிஎன்றும் திரிந்துள்ளன. இதனால், சிந்தாறு ஒருகாலத்தில்எழுகிளைகள் கொண் டிருந்ததாகத் தெரிகின்றது.சிந்தாற்றுத் தேவிக்கு ஏழ் உடன் பிறந்தாண்மார்(sisters) என்றஇருக்குவேதியர் கொள்கையினாலும் இது வலியுறும்.
|