பக்கம் எண் :

46தமிழர் வரலாறு-2

"அந்த ணாளர்க் கரசுவரை வின்றே." 

(தொல்.1574)

"படையுங் கொடியுங் குடையும் முரசும்
நடைநவில் புரவியுங் களிறுந் தேரும்
தாரும் முடியும் நேர்வன பிறவும்
தெரிவுகொள் செங்கோல் அரசர்க் குரிய." 

(தொல்.1571)

"வைசிகன் பெறுமே வாணிகவாழ்க்கை." 

(தொல்.1578)

"வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது
இல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி." 

(தொல்.1581)

ஆரிய நால்வரணப் பாகுபாடுதமிழகத்தில் மெள்ளமெள்ளப் புகுத்தப்பட்டது.தொல்காப்பியர் காலத்தில் பிராமணரே அந்தணராயினர். அவர்க்கு அரசுரிமையும் கொள்ளப்பட்டது.மற்ற மூவகுப் பும் முன்போலிருந்தன. வாணிகர்க்குவைசியர் என்னும் வடசொல் வழங்கத்தொடங்கிற்று.

வேளாண் தலைவரான வேளிர்க்கு அல்லதுகுறுநில மன்னர்க்கு வேந்தர்க் குற்றுழிப்பிரிவுண்டு. அதனால்,

"வேந்துவிடு தொழிலின் படையுங் கண்ணியும்
வாய்ந்தனர் என்ப அவர்பெறும் பொருளே." 

(தொல்.1582)

"வில்லும்வேலுங் கழலுங் கண்ணியும்
தாரும் ஆரமுந் தேரும் வாளும்
மன்பெறு மரபின் ஏனோர்க்கு முரிய" 

(தொல்.1583)

என்று கூறப்பட்டது. இச் சிறப்புபொதுமக்களான உழுதூண் வேளாளர்க் கில்லை யென்பது,

"அன்ன ராயினும் இழிந்தோர்க் கில்லை" 

(தொல்.1584)

என்பதனாற் பெறப்படும்.

தொல்காப்பிய அரங்கேற்றம்

தொல்காப்பியர் அகத்தியரின்மாணவரல்லர். மாணவராயின் அகத்தியரை அல்லதுஅகத்தியத்தைத் தம் நூலிற் குறித்திருப்பார்.அகத்தியர் தலைமையிலேயே தொல்காப்பியமும்அரங்கேற்றப் பட்டிருக்கும். "முந்துநூல் கண்டு"என்றதற் கேற்ப, "என்மனார் புலவர்" என்றுபலர்பாலிலேயே முன்னூலாசிரியரைத் தம் நூல் முழுதும்குறித்திருக்கின்றார். அகத்தியர்க்கும்தொல்காப்பியர்க்கும் இடைப்பட்ட காலம்ஏறத்தாழ ஐந்நூறாண்டாகும். முன்னவரின் மாணவரேபின்னவர் என்று கொண்டவர்,அகத்தியரைப்பற்றித் தொல்காப்பியத்தில் ஒருகுறிப்புமின்மையால், அதற்குங் கரணியங்காட்டுவார்போல் ஒரு கதையைக் கட்டிவிட்டனர்.