பக்கம் எண் :

தமிழர் வரலாறு-247

தொல்காப்பியர்காலத்தில் கழகமும் ஏற்படவில்லை. பாண்டியன்பெரும்பாலும் மணவூரில் வதிந்திருத்தல் வேண்டும்.அற்றைப் பாண்டியன் பெயர் நிலந்தரு திருவிற்பாண்டியன் என்று, பனம்பாரனார் குறித்துள்ளார்.அவன் இரண்டாம் கடல்கோட்குத் தப்பினஇடைக்கழகப் பாண்டியன் அல்லன். நிலமில்லாத தன்குடிகள் சிலர்க்கு நிலம் ஒதுக்கியதனால், அப்பெயர் பெற்றிருத்தல் வேண்டும்.

"அறங்கரை நாவின் நான்மறை முற்றிய
அதங்கோட் டாசாற் கரில்தபத் தெரிந்து"

என்று சிறப்புப்பாயிரங் கூறுவதால், அரங்கேற்ற அவையில் தலைமைதாங்கினவன் நால்வேதமும் வல்ல ஒரு பிராமணத்தமிழ்ப்புலவன் என்பது தெளிவாகின்றது. இது இரா.இராகவையங்கார் தலைமையில் உ.வே. சாமிநாதையர்தம் நூலை அரங்கேற்றிய தொத்ததே.

தொல்காப்பியத்திலுள்ளஆரியக் கருத்துகளும் ஒருசில வட சொற்களும்பற்றிநாம் வருந்த வேண்டுவதில்லை. அது அக்காலத்துநிலைமை. ஆரியக் கருத்தும் சொல்லும்கொண்டிருந்ததனாலேயே, அது இதுவரை அழிவுறாமல்தப்பிவந்துள்ள தென்று நாம் உணர்ந்துமகிழவேண்டும்.

கிறித்துவிற்குமுற்பட்ட கடைக்கழகக் காலத்து நூல்களுள், நமக்குக்கிடைத்துள்ளது திருக்குறள் ஒன்றே. அதுவும்,ஆதிபகவன் கதையாலும் திரிவர்க்க வழிநூலென்னும்இளைப்பாலும் திருவள்ளுவ வெண்பாமாலையாலுமே தப்பியிருத்தல் வேண்டும். திருக்குறட்கு ஐந்நூறாண்டுமுற்பட்டதும், இயற்றமி ழிலக்கணம் முழுவதும்குமரிநாட்டு முறைப்படி எடுத்தியம்புவதுமானதொல்காப்பியம், நம் முன்னோரின் பெருமையைஅறியவும், மீண்டும் தமிழை அரியணை யேற்றவும்நாமும் முன்னேறி நம் உரிமையை முற்றும் பெறவும்,இன்று நம் கையில் உள்ளதெனின், இது நம்நற்காலத்திற் கேதுவான இறைவன் திருவருளே என்றுதெரிந்து கொள்க.

தொல்காப்பியத்தொழிற்குலங்களும் தொழில்களும்

அகவர் (வ. சூதர்.) -அரசன்பள்ளியெழுச்சி பாடுவோர்.

"சூத ரேத்திய துயிலெடை நிலையும்" 

(தொல்.பொருள்.91)

"நாளீண்டிய நல்லகவர்" 

(மதுரைக்.223)

தொல்காப்பியத்தில்வடசொல்லே ஆளப்பட்டுள்ளது.

அடியோர் 

அடித்தொழில் செய்பவர், அடிமையர்.

அந்தணர் 

துறவியர்.