அரசர் | - | நாடாள்வார். |
அறிவர் | - | முக்கால அறிவினர், முற்காணியர் (Prophets) |
ஆயர் | - | ஆநிரை மேய்ப்போர், ஆடுமாடு மேய்க்கும் இடையர். |
இளையர் | - | வேலைக்காரர். |
ஏரோர் | - | உழவர். |
ஐயர் | - | முனிவர். |
செவிலி | - | அரசர் செல்வர் முதலிய பெருமக்கள் பிள்ளைகளின் வளர்ப்புத்தாய். |
கூத்தர் | - | கூத்தாடுபவர், நடஞ்செய்பவர், நாடக நடிகர். |
துடியர் | - | உடுக்கை யடிப்பவர். |
தேரோர் | - | தேர்ப்பாகர். |
படைஞர் | - | படைமறவர். |
பரத்தையர் | - | விலைமகளிர், பொதுமகளிர். |
பாகர் | - | குதிரைப்பாகர் (வாதுவர்), யானைப் பாகர். |
பாங்கன் | - | அரசரின் அகப்பொருளொழுக்கத் தோழன். |
பாங்கி | - | அரசியரின் அகப்பொருளொழுக்கத் தோழி. |
பாணர் | - | இசைப்பாணர், குழற்பாணர், யாழ்ப்பாணர், மண்டைப்பாணர் ஆகிய இசைத் தொழிலார் |
பார்ப்பார் | - | ஆசிரியர், புலவர், உவச்சர், குருக்கள் முதலிய இல்லறத்தாரான கல்வித் தொழிலார். |
பொருநர் | - | ஏர்க்களம் பாடுநரும் போர்க்களம் பாடுநரும். |
மறவர் | - | போருங் கொள்ளையுமாகிய மறத்தொழில் புரியும் பாலைவாணர், படைமறவர். |
வாணிகர் | - | சில்லறையாகவும் மொத்தமாகவும் பண்ட மாற்றுச் செய்யும் நிலவாணிகரும், கடல் கடந்து வெளிநாட்டொடு வணிகஞ் செய்யும் நீர்வாணிகரும். |
விரிச்சி | - | விரிச்சி (oracle) கூறுபவர். விள்- விடு - விடிச்சி - விரிச்சி = தெய்வத்தினிடமிருந்து மறைவான செய்திகளை அறிந்து வெளிப்படுத்துதல். |
வினைவலர் | - | ஏவிய தொழில் செய்வதில் வல்லவர். |
விறலி | - | விறல்(சத்துவம்)பட ஆடும் பாண்மகள். |
வேட்டுவர் | - | வேட்டைத் தொழில் செய்யும் குறிஞ்சி, முல்லை பாலைவாணர். |