பக்கம் எண் :

தமிழர் வரலாறு-249

வேந்தர் 

சேரசோழபாண்டியர்.

வேயர்  

- ஒற்றர்.

வேலன்  

- முருகன் என்னும் தெய்வமேறி யாடுபவன்.

வேளாளர்  

- உழுதுண்போரும் உழுவித்துண்போரும்.

இனி, பல்வகைக் கட்டடங்களும்கருவிகளும் கலங்களும் செய்பொருள்களும்தொல்காப்பியத்திற் குறிக்கப்பட்டிருப்பதால்,அவற்றை உருவாக்கிய கொல்லர், தச்சர்,கற்றச்சர், தட்டார், கன்னார் என்னும் ஐவகைக்கம்மியரும் கொத்தர் நெசவர் குயவர் முதலியதொழிலாளரும், அக்காலத்தில் இருந்திருத்தல்வேண்டும்.


தொல்காப்பியர் காலத் தமிழக எல்லை

"வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின்
நாற்பெயர் எல்லை யகத்தவர் வழங்கும்
யாப்பின் வழிய தென்மனார் புலவர்" 

(தொல்.1336)

என்று, தொல்காப்பியர் தம் காலத்தமிழ்யாப்பிற்குக் கூறிய எல்லையே அவர் காலத்தமிழக எல்லையு மாகும். ஒரு நாட்டிற்கு நாற்றிசையிருப்பின், நாலெல்லையும் இருக்கத்தான்செய்யும். அதைச் சொல்ல வேண்டுவதில்லை. ஆயின்,எல்லைப் பெயரைக் குறியாது நாற்பெயர் எல்லைஎன்று மட்டும் சொல்லி யிருத்தலால், அந்நாலெல்லையும் வேறுபட்ட வகையினவா யிருத்தல்வேண்டும். வடக்கில் வேங்கட மலையும் தெற்கில்குமரியாறும் கிழக்கில் வங்கக் கடலும்தெளிவாய்த் தெரிந்த எல்லைகளாம். மேற்கில் எதுஎல்லையெனின், அது குடமலைத் தொடரே.அக்காலத்தில் சேரநாடு திருச்சிராப்பள்ளிமாவட்டக் கருவூரைத் தலைநகராகக் கொண்டு,பெரும்பாலும் குடமலைக்குக் கிழக்கேயே இருந்தது.அம் மலைத்தொடருக்கு மேற்கில் இருந்த நிலம், மிகவொடுங்கித் துறைநகர்களுக்கன்றி ஒரு நாட்டுமக்கள் அனைவரும் வதியத்தக்கபரப்புள்ளதாயிருந்ததில்லை. பிற்காலத்திலேயேமேல்கரை நிலப்பகுதி விரிவடைந்ததாகத்தெரிகின்றது. இதையே, பரசுராமர் தாம்தவஞ்செய்தற்கு இடம் வேண்டிக் கடல்மீதுஅம்பெய்ய, அது சற்றுப் பின்வாங்கி இடந்தந்ததுஎன்னுங் கதை குறிக்கும். பரசுராமர் அங்குச்சென்றபின், இயற்கையாகக் கடல் ஒதுங்கி நிலம்விரிவடைந்தது என்பதே உண்மைச் செய்தி.

"வண்புகழ் மூவர் தண்பொழில்வரைப்பின்" என்னுந் தொடர், தொல்காப்பியர்காலத்தில் மூவேந்தரும் ஒற்றுமைப்பட்டு உயர்வாயிருந்ததையும், குடிகள் கொள்ளையும் போருமின்றிஇன்பமாக வாழ்ந்ததையும் குறிப்பாக வுணர்த்தும்.