பக்கம் எண் :

50தமிழர் வரலாறு-2

தொல்காப்பியருக்குப்பின் ஆரியச் சூழ்ச்சியாலும் தன்னலப் பற்றாலும்மூவேந்தரிடையும் அடிக்கடி போர் மூண்டதனாலும்,துணையரசரும் குறுநிலமன்னரும் தம் வேந்தர்க்கடங்காது முடிசூடி முழுவுரிமை யரசரானதனாலும்,சோழநாட்டின் வடபகுதி தொண்டை நாடென்றும்,சேரநாட்டின் கீழ்ப்பகுதி கொங்கு நாடென்றும்பிரிந்து போயின.

தொண்டைநாடு

தொண்டைநாடுஆர்க்காடுபோல் நிலைத்திணையாற் பெயர்பெற்றதாகத் தெரிகின்றது. தொண்டை என்பதுகோவைக் கொடியையும் ஆதொண்டையையும் குறிக்கும்.ஆதொண்டை என்பது காற்றோட்டிச் செடிக்கும்காற்றோட்டிக் கொடிக்கும் பொதுப்பெயர். இம்மூன்றனுள் ஒன்று மிகுந்திருந்த நிலப்பகுதிதொண்டைநாடெனப் பெயர் பெற்றது.

திரையன் என்பதுநெய்தல்நிலத் தலைவன் பெயர். ஆர்க்காடு,செங்கழுநீர்ப்பட்டு, நெல்லூர் ஆகிய மும்மாவட்டப் பகுதிகளைக் கொண்டது தொண்டைநாடு.ஒருகால் நெய்தல்நிலச் சிறப்புப்பற்றி, அந்நாட்டரசன் திரையன் எனப் பெயர்கொண்டிருக்கலாம். நாகபட்டினத்துச் சோழன்நாககன்னியைப் புணர்ந்து ஒரு புதல்வனைப்பெற்றானென்று நச்சினார்க்கினியர் கூறுங்கதையும், கிள்ளிவளவன் பீலிவளை என்னும்நாககன்னியைப் புணர்ந்து ஒரு புதல்வனைப்பெற்றானென்று சீத்தலைச் சாத்தனார் கூறுங்கதையும், பல செய்திகளில் வேறுபட்டனவும் வெவ்வேறுகாலத்தனவும் ஆகும்.

சோழன் கரிகாற்பெருவளத்தான்மேற் பட்டினப்பாலை பாடிய கடியலூர்உருத்திரங் கண்ணனாரே பெரும்பாணாற்றுப்படையில்,

"கொண்டி யுண்டித் தொண்டையோர் மருக"

என்று இளந்திரையனைப்பல தலைமுறைப்பட்ட ஓர்ஆள்குடியின னாகக்கூறியிருப்பதால், மேற்கூறிய கதை யிரண்டும்பிற்காலத்தன வென்றும் பெரும்பாலுங்கட்டுச்செய்தி யென்றும் அறிக.

அஃதாயின், "அந்நீர்த்திரைதரு மரபின் உரவோ னும்பன்" என்று பாடியதைஇளந்திரையன் எங்ஙனம் ஒத்துக்கொண்டா னெனின்,ஆரியச் சார்பால் அக்காலத் தமிழர் பகுத்தறிவையிழந்துவிட்டதனால்,

"நீயே, வடபான் முனிவன் தடவினுள் தோன்றி
................................
நாற்பத் தொன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே" 

(புறம்.201)