பக்கம் எண் :

தமிழர் வரலாறு-289

என்பதனால், கொண்கான நாடு மீண்டும்சேரர்கை சேர்ந்தமை அறியப்படும்.

கீழைச் சேரநாடாகிய கொங்குநாட்டின்தென்பகுதியான தகடூர் நாட்டை, அதிகமான்மரபினரான சேரர்குடிக் கிளையினர் ஆண்டு வந்தனர்.வடபகுதியின் மேற்பாகத்துக் குடகுநாட்டைக்கோசரும், எஞ்சிய பாகத்தை எருமையூரன்இருங்கோவேள் கங்கர் கட்டியர் ஆகியோரும்ஆண்டுவந்தனர்.

"கொங்கிளங் கோசர்" 

(சிலப். உரைபெறு கட்டுரை)

"குடகக் கொங்கரும்" 

(சிலப்.30:159)

கி.பி. 7ஆம் நூற்றாண்டில் மேலைச்சேரர்குடிக் கிளைகள் நேர்வழித் தொடர்ச்சியற்றன. அதன் பின், பெருமாள் மரபினர் சிலர்ஆண்டு வந்தனர். அவருள் மூவர் குறிப்பிடத்தக்கவர்.

முதலாம் சேரமான் பெருமாள் (667 - 712)

இவர் பெருமாக் கோதை என்னும்இயற்பெயரையும் கழறிற் றறிவார் என்னும்சிறப்புப் பெயரையும் உடைய சிவனடியார்.

நாலாம் குலசேகரப் பெருமாள் (754 - 98)

இவர் குலசேகராழ்வார் என்னும்திருமாலடியார்.

இரண்டாம் சேரமான்பெருமாள் (798 - 834)

இவர் ஓர் 'இசலாம்' அடியார். நாட்டைப்பன்னிருவர்க்குப் பகிர்ந்து கொடுத்துவிட்டுமெக்கா சென்றுவிட்டார். (துடிசைகிழார்: சேரர்வரலாறு).

அப் பன்னிரு நாடுகளாவன :

(1) கோழிக்கோடு 

(7) சிரக்கல்

(2) வள்ளுவநாடு 

(8) கடத்தநாடு

(3) கொச்சி 

(9) பாலக்காடு

(4) திருவிதங்கூர்(திருவதங்கோடு) 

(10)பெய்ப்பூர்

(5) குறும்பரநாடு 

(11) பரப்பநாடு (ஒரு பகுதி)

(6) கோட்டயம் 

(12) பரப்பநாடு (மற்றொருபகுதி)

சேரநாட்டுத் தமிழ், 10ஆம்நூற்றாண்டிற்குப் பின் கொடுந் தமிழாகத்திரிந்து, 15ஆம் நூற்றாண்டிற்குப் பின் திரவிடமாகமாறிவிட்டது. சேர (சேரல) நாடும் மொழியும் கேரளம்எனப்பட்டன.

சேரல்-சேரலம்-கேரளம்.