கொங்குநாட்டு அரசுகள் அதிகர் (அதிகமானர்), கங்கர்,கட்டியர் என்னும் மும்மரபினரும், கடைக்கழகக்காலத்திலிருந்து 13ஆம் நூற்றாண்டு வரை,பேரரசர்க்கு அடங்கியும் அடங்காதும்,கொங்குநாட்டின் பகுதிகளை ஆண்டு வந்தனர். சோழர் ஆட்சி | - | 1004-1303 | இடையிற் பாண்டியர் மீயாட்சி | - | 1265-1300 |
சோழராட்சிக்குப் பின்,கேரளராட்சியும் ஒய்சளராட்சியும் விசயநகரநாயக்கராட்சியும் உடையாராட்சியும் ஐதரலிதிப்பு சுலுத்தானாட்சியும் சிச்சிறிது காலம்நடைபெற்றன. ஆங்கிலராட்சி-1799-1947 இந்திய விடுதலையும் ஒன்றியமும் (Union)(1947). கேரள நாட்டுச் சிற்றரையங்களும்இந்திய ஒன்றியத்திற் கலந்தன. தமிழ்நாடு- | 1. | பேராய (Congress)ஆட்சி | - | 1947 - 67 | | 2. | தி.மு.க. (D.M.K.)ஆட்சி | - | 1967 |
மூவேந்தர் ஆரிய அடிமை முதிர்வு
கடைக்கழகக் காலத்திலேயே,மூவேந்தரும் வேள்வி மதத்தைத் தழுவி ஆரியஅடிமைகளாய்ப் போய்விட்டதனால், இந்தியாமுழுவதையும் நிலையான ஆரிய அடிமைத்தனத்துள்அமிழ்த்துதற் பொருட்டு, நால்வரண வொழுக்கத்தைநிலைநிறுத்தும் மனுதரும சாத்திரம் என்னும்குலவொழுக்க நூல் கி.பி.2 ஆம் நூற்றாண்டிலும்;கோவிலமைப்பு, வழிபாட்டு முறை, போற்றியான்(அருச்சகன்) தகுதி, கொண்முடிபு (சித்தாந்தம்),தெய்வச் சிறப்பு, வழிபாட்டின் பயன் முதலியவற்றைவிளக்கிக் கூறும் ஆகமம் என்னும் வழிபாட்டுமறை கி.பி. 6ஆம் நூற்றாண்டிலும் சமற்கிருதத்தில்இயற்றப்பட்டுவிட்டன. சிவனிய ஆகமங்கள் காமிகம்முதல்வாதுளம்வரை இருபத்தெட்டென்பர். காளிவழிபாட்டு மறையைத் தந்திரம் என்பர். "தந்த்ரங்கள் ஸம்ஹிதை, ஆகமம்,தந்த்ரம் என மூவகைப்படும். அவற்றுள் ஸம்ஹிதைகள்வைஷ்ணவர்களாலும், ஆகமங்கள் சைவர்களாலும்,தந்த்ரங்கள் சாக்தர்களாலும்போற்றப்படுகின்றன. அவை முற்றிலும் வைதிகக்கொள்கைகளைப் பின்பற்றியன எனக் கூறுதற்கு இடன்இல்லை. அவை தீக்ஷை கொண்டு ஆசிரியனிடமிருந்துகொள்ளத்தக்கன. தந்த்ரங்கள் கி.பி. 5ஆம்நூற்றாண்டின் பின்னரே உண்டாயின என்பர்" என்று(P.S.) சுப்பிரமணியசாத்திரியார் கூறுவர் (வடமொழி நூல் வரலாறு, ப.309).
|